பிறந்ததில் இருந்து தோல்யே சந்திக்காத 3 ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

Written ByRK Spark
Published: Nov 01, 2025, 02:44 PM IST|Updated: Nov 01, 2025, 02:44 PM IST

சில ராசிக்காரர்கள் தாங்கள் பிறந்தது முதல், வெற்றியை மட்டுமே ருசிக்கும் ஒரு அற்புதமான வரத்தை பெற்றிருப்பதாக ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

1/6

ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒருவரின் பிறப்பு ராசி அவரது குணநலன்கள், திறமைகள் மற்றும் வாழ்க்கை பாதையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் சில ராசிக்காரர்கள், தாங்கள் பிறந்தது முதல், வெற்றியை மட்டுமே ருசிக்கும் ஒரு அற்புதமான வரத்தை பெற்றிருப்பதாகவும், தோல்வி என்ற வார்த்தை, அவர்களின் அகராதியிலேயே இல்லை என்றும் ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

2/6

அவர்களின் கிரகங்களின் அமைப்பு, அசைக்க முடியாத தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி ஆகியவை, அவர்களை எப்போதும் வெற்றி பாதையிலேயே பயணிக்க வைக்கிறது. தோல்வி அவர்களை நெருங்கினாலும், அதை பாடமாகக் கற்றுக்கொண்டு, ஃபீனிக்ஸ் பறவை போல மீண்டும் எழுந்து நின்று, வெற்றியை தனதாக்கி கொள்வார்கள். 

3/6

அந்த வகையில், பிறந்தது முதல் வெற்றியை மட்டுமே சந்திக்கும் அந்த 3 ராசிக்காரர்கள் யார், அவர்களின் வெற்றி ரகசியம் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

4/6

மேஷ ராசி

ராசி மண்டலத்தின் முதல் ராசியான மேஷம், போர் கிரகமான செவ்வாயை அதிபதியாக கொண்டது. இதனால், மேஷ ராசிக்காரர்கள் பிறப்பிலிருந்தே ஒருவிதமான ஆற்றல், தைரியம் மற்றும் போட்டி மனப்பான்மையுடன் இருப்பார்கள்.  குழந்தைப் பருவத்திலிருந்தே, படிப்பு, விளையாட்டு என அனைத்திலும் முதலிடம் பிடிப்பதில் இவர்கள் குறியாக இருப்பார்கள். 

5/6

சிம்ம ராசி 

கிரகங்களின் ராஜாவான சூரியனை அதிபதியாக கொண்ட சிம்ம ராசிக்காரர்கள், பிறப்பிலிருந்தே ஒருவிதமான தலைமை பண்புடனும், கம்பீரத்துடனும் இருப்பார்கள். அனைவரின் கவனத்தையும் தங்கள் பக்கம் ஈர்க்கும் ஒரு காந்த சக்தி, இவர்களுக்கு இயற்கையாகவே உண்டு. சமூகம், தொழில், காதல் என வாழ்க்கையின் எந்தத் துறையாக இருந்தாலும், அதில் தாங்கள்தான் ராஜாவாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். 

6/6

விருச்சிக ராசி

செவ்வாய் மற்றும் புளூட்டோ ஆகிய இரண்டு சக்திவாய்ந்த கிரகங்களால் ஆளப்படும் விருச்சிக ராசிக்காரர்கள் மர்மமான, ஆனால் மிக ஆழமான மனவலிமை கொண்டவர்கள். தங்களது இலக்கை அடையும் வரை, ஓயாமல் உழைக்கும் குணம் கொண்டவர்கள். தங்களுக்கு ஏற்படும் அவமானங்களையும், தோல்விகளையும் மனதில் வைத்துக்கொண்டு, சரியான நேரத்தில், தங்களது வெற்றியை கொடுப்பார்கள்.