Arokya Milk Price Hike Latest: ஆரோக்கியா பால், தயிர் விலை நாளை (ஜூலை 09) முதல் உயருகிறது. ஆரோக்கியா பால், தயிர் விலை லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்படுகிறது. இதனால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
1/5இந்தியாவின் முன்னணி தனியால் பால் நிறுவனமாக இருப்பது ஆரோக்கியா. ஆரோக்கியா நிறுவனம் பால், தயிர் போன்றவற்றை தமிழகத்தில் விற்பனை செய்து வருகிறது. தமிழகத்தில் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டாலும், சில பகுதிகளில் ஆரோக்கியா பால் விற்பனை இன்றும் இருந்து வருகிறது.
2/5இந்த நிலையில், ஆரோக்கியா நிறுவனம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, நாளை (ஜூலை 09) முதல் பால், தயிர் விலையை உயர்த்துவதாக ஆரோக்கியா நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாளை முதல் ஆரோக்கியா பால், தயிர் லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்படும் என அறிவித்துள்ளது.
3/5அதன்படி, அரை லிட்டர் சமன்படுத்தப்பட்ட ஆரோக்கியா பால் லிட்டருக்கு ரூ.29ல் இருந்து ரூ.31 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.35ல் இருந்து ரூ.37 ஆகவும், கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பால் ரூ.39லிருந்து ரூ.41 ஆகவும் விற்பனை செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
4/5இதே போல, ஒரு லிட்டர் சமன்படுத்தப்பட்ட ஆரோக்கியா பால் ரூ.54ல் இருந்து ரூ.57 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட ஆரோக்கியா பால் ரூ.66லிருந்து ரூ.69ஆகவும், கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பால் ரூ.37லிருந்து ரூ.76 ஆகவும் நாளை முதல் விற்பனை செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
5/5மேலும், அரை லிட்டர் ஹட்சன் தயிர் ரூ.42லிருந்து ரூ.44 ஆகவும், ஆரோக்கியா தயிர் ரூ.40ல் இருந்து ரூ.42 ஆகவும் விலை அதிகரிக்கிறது. ஆரோக்கியா பால், தயிர் விலை உயர்வு நாளை (ஜூலை 09) முதல் அமலுக்கு வர உள்ளது. இதனால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.