கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்க... ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் சூப்பர் உணவுகள்

Published: Jun 09, 2025, 04:56 PM IST|Updated: Jun 09, 2025, 04:56 PM IST

Liver Detox: நமது உணவு பழக்கம் கல்லீரலில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உடலின் டீடாக்ஸ் ஃபேக்டரி ஆக வழங்கும் கல்லீரல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் காரணமாக கல்லீரலில் அதிக அழுத்தம் ஏற்பட்டு, உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் செயல்முறை பாதிக்கப்பட்டு, உடல் ஆரோக்கியம் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. ஆயுர்வேதத்தில் பரிந்துரைக்கப்பட்ட சில உணவுகள், கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்கி அதனை இயற்கையாக டீடாக்ஸ் செய்கின்றன.

Liver Health1/9

கல்லீரல் ஆரோக்கியம்

கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்க ஆயுர்வேத மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவுகளை பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் உடலின் மிக முக்கிய உறுப்பான கல்லீரலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றி அதனை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

lemon2/9

எலுமிச்சை

எலுமிச்சை: வைட்டமின் சி சத்து நிறைந்துள்ள எலுமிச்சையை, வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பதால் கல்லீரலில் சேரும் நச்சுக்கள் நீக்கப்படும்.

 

Turmeric Milk3/9

கருமிளகு மஞ்சள் பால்

கருமிளகு மஞ்சள் பால்: மஞ்சளில் உள்ள குர்குமின் கல்லீரல் சேரும் நச்சுக்களை நீக்குகிறது. அதில் கரு மிளகு சேர்த்து அருந்துவதால் அதன் பலனை இரட்டிப்பாக்கலாம்.

Beetroot4/9

பீட்ரூட்

பீட்ரூட்டில் உள்ள பீட்டா அலனைன், கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்குவதோடு, அதன் வீக்கத்தை குறைத்து செயல் திறனை அதிகரிக்கிறது.

Garlic5/9

பூண்டு

பூண்டு: பூண்டில் காணப்படும் அல்லிசின் மற்றும் செலினியம் என்று கூறுகள் கல்லீரலை டீடாக்ஸ் செய்யும் சிறந்த ஆற்றல் கொண்டவை. இவை கொழுப்பு கல்லீரல் ஆபத்தையும் பெருமளவு தடுக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் பச்சை பூண்டு எடுத்துக் கொள்வது பலன் தரும்.

Coriander6/9

தனியா

தனியா: கொத்தமல்லி விதை என்னும் தனியா கல்லீரலுக்கு அருமருந்தாக இருக்கும். காலையில் கொத்தமல்லி நீர் அருந்துவதும், காய்கறிகளில் பச்சை கொத்தமல்லியை அதிக அளவில் சேர்த்துக் கொள்வதும் பலன் கொடுக்கும்.

Amla7/9

நெல்லிக்காய்

நெல்லிக்காய்: ஆயுர்வேதத்தில் நெல்லிக்காய்க்கு மிக முக்கிய இடம் உண்டு. இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள், கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்கும் அருமருந்து என்கின்றனர் ஆயுர்வேத நிபுணர்கள்.

Ginger8/9

இஞ்சி

இஞ்சி: கல்லீரலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் நொதியை தூண்டி, கல்லீரலுக்கான ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, கொழுப்பு கல்லீரல் பிரச்சனையை விரட்டும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு. காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி நீர் அருந்துவதும், உணவுகளில் இஞ்சியை தவறாமல் சேர்ப்பதும் பலன் அளிக்கும்.

Disclaimer9/9

பொறுப்பு துறப்பு

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.