Astro Traits: ஆடம்பர வாழ்க்கைக்காக.... பணத்தை வாரி இறைக்கும் 5 ராசிகள் இவை தான்

Astro Traits: ஜோதிடத்தில் ராசிகளுக்கான குண நலன்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் சில ராசிகள், தங்கள் ஆடம்பரத்திற்காகவும், ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளவும், பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது. 

ஜோதிடத்தில், குறிப்பிட்ட 5 ராசிகள் மிகவும் செலவு செய்வார்கள் இந்த ராசிக்காரர்கள் தங்கள் விருப்பங்களை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் செல்லலாம் என்றும் பணத்தை சேமிக்கும் எண்ணமே இருப்பதில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால், இவர்கள் கடனில் சிக்கி, நெருக்கடிக்கு ஆளாகும் நிலையும் உண்டாகிறது.

1 /8

சில ராசிக்காரர்கள், எதையும் யோசிக்காமல் செலவு செய்யக் கூடியவர்கள் என்றும், நிதி நிலைமையை கட்டுப்படுத்துவதில் மிகவும் சிரமப்படுவார்கள் என்றும், ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர். வீண் செலவு செய்வதில் முதலிடம் வகிக்கும் 5 ராசிகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

2 /8

மேஷ ராசியினர், செலவு செய்வதற்கு முன்பு சிந்திக்கும் வழக்கம் இல்லாதவர்கள். ரிஸ்க் எடுக்க அஞ்சாதவர்கள். திடீர் செலவுகளை பற்றி புரிந்தும் கவலைப்படாதவர்கள். இருப்பினும் இவர்கள் கொஞ்சம் யோசித்து திட்டமிட்டு செலவு செய்தால், நிதி நிலையை மேம்படுத்தி, நிலைமையை கட்டுப்படுத்த முடியும்.

3 /8

மிதுன ராசிக்காரர்கள், புதிய விஷயங்களை முயற்சி செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். அதற்காக பணத்தை செலவு செய்ய தயங்காதவர்கள். அது ஆடைகளுக்காக இருக்கலாம். அல்லது புதிய கேட்ஜெட்டுகளை வாங்கி குவிப்பதில் இருக்கலாம். பணத்தை வாரி இறைப்பதை கட்டுப்படுத்தினால், கடன் தொல்லை இல்லாமல் வாழலாம்.

4 /8

சிம்ம ராசிக்காரர்கள், ஆடம்பரத்தையும் அந்தஸ்தையும் பெருமையும் காட்டிக்கொள்ள, பணத்தை வாரி இறைக்க தயங்காதவர்கள். தன்னுடைய நிலைமை மீறி செலவு செய்து, தனது கௌரவத்தை காப்பாற்றிக்கொள்ள நினைப்பார்கள். இந்த மனநிலையில் இருந்து அவர்கள் வெளி வந்தால், அவர்கள் பொருளாதார ரீதியாக சிறப்பாக முன்னேறலாம்.

5 /8

துலாம் ராசிக்காரர்கள், வாழ்க்கையை அனுபவிக்க நினைப்பவர்கள். அதற்காக செலவு செய்ய தயங்காதவர்கள். கலைப் பொருட்கள், அலங்கார பொருட்கள், அழகு சாதனங்கள் ஆகியவற்றை வாங்கி குவிப்பார்கள். பட்ஜெட் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.

6 /8

தனுசு ராசிக்காரர்கள் சேமிப்பை பற்றி கவலைப்படுபவர்கள் அல்ல. இன்றைய தினம் நன்றாக வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன், பொழுதுபோக்கிற்கும் ஆடம்பரத்திற்கும் அதிகம் செலவழிப்பார்கள். நிதியை கொஞ்சம் திட்டமிட்டு செலவு செய்தால், கடன் தொல்லைகளை தவிர்ப்பதோடு, நிதி நிலைமையும் முன்னேறும் என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

7 /8

பொதுவாக நிதிநிலை நன்றாக இருக்க, வருமானத்திற்கு ஏற்றபடி செலவு செய்ய வேண்டும் என்பதை அனைவருமே மனதில் கொள்ள வேண்டும். வருமானத்திற்கு மீறி செலவு செய்வது என்றுமே பிரச்சனை தான். அதோடு வருமானத்தில் ஓரளவு பணத்தை சேமிக்க வேண்டும் என்று எண்ணம் வேண்டும். அது போக இருக்கும் பணத்தை மட்டுமே செலவழிக்க வேண்டும். இதனால் வாழ்க்கையில் முன்னேறுவதோடு, கடன் தொல்லையும் இருக்காது.

8 /8

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.