கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கடைசி நேரத்தில் வராமல் போகும் - இந்த தப்பை செஞ்சிடாதீங்க..!

Kalaingar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை நீங்கள் செய்யும் ஒரு சிறிய தவறால் கடைசி நேரத்தில் வராமல் போக வாய்ப்புள்ளது, தெரிந்து கொள்ளுங்கள்.

Kalaingar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) கடைசி நேரத்தில் வராமல் போவதற்கான என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

 

1 /8

தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான பணிகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கிவிட்டது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு புதிய பயனாளிகள் தேர்வு தொடங்கிவிட்டதாகவும், இன்னும் 3 மாதங்களில் புதிய பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும் கூறிவிட்டார்.

2 /8

இதனால் இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்காதவர்கள் கூட, உடனடியாக விண்ணபிப்பது நல்லது. ஏனென்றால் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்ப பரிசீலனை நடந்து வருகிறது.

3 /8

ஏற்கனவே 1 கோடியே 15 லட்சம் பேர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற்று வரும் நிலையில், புதியதாக எவ்வளவு பேர் சேர்க்கப்படுவார்கள் என்ற விவரத்தை தமிழ்நாடு அரசு தோராயமாக கூட தெரிவிக்கவில்லை.   

4 /8

இருப்பினும் சில லட்சம் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது. அதனால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு இனி வரும் நாட்களில் மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. 

5 /8

பல அளவுகோல்களின் அடிப்படையிலேயே புதிய பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரேஷன் அட்டை, மின்சார பில், நிலம் வைத்திருப்பவர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள் உள்ளிட்ட விவரங்களை எல்லாம் சரி பார்த்த பின்னரே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் பயனாளிகளை தமிழ்நாடு அரசு தேர்வு செய்கிறது.

6 /8

அப்படி தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கடைசி நேரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காமல் போக கூட வாய்ப்பு இருக்கிறது. எதனால் இப்படி நடக்க வாய்ப்பு இருக்கிறது என்றால், சிலர் வங்கி கணக்கு எண்ணை தவறாக கொடுப்பது, மொபைல் எண்ணை மாற்றி கொடுப்பது போன்ற தவறுகளை செய்துவிடுகின்றனர்.

7 /8

இந்த தவறால் உங்கள் மொபைல் எண்ணுக்கு மெசேஜ் வரும், ஆனால் பணம் வேறொருவருடைய வங்கி கணக்குக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. இப்படியான சிறிய தவறுகளை கவனக்குறைவாக செய்வதால் மகளிர் உரிமைத் தொகைக்கு தேர்வு செய்யப்பட்டும் கடைசி நேரத்தில் மீண்டும் இதற்காக நீங்கள் அலைய வேண்டியிருக்கும்.

8 /8

எனவே, கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கும்போதே நீங்கள் கொடுக்கும் அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கிறதா? என்பதை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள். இதனால் மகளிர் உரிமைத் தொகை தடைபடாமல் கிடைப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.