குளிர்காலத்தில் முடி உதிர்வை கட்டுப்படுத்த இந்த 5 தவறுகளை செய்ய வேண்டாம்!

Hair Fall Tips: தினசரி முடி உதிர்வது சகஜம் தான் என்றாலும், சிலருக்கு அதிக முடி உதிர்வு இருக்கும். குளிர்காலத்தில் முடி உதிர்வை குறைப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். 
1 /6

முடி உதிர்வுக்கு பல காரணங்கள் உள்ளன. மன அழுத்தம், தவறான முடி பராமரிப்பு போன்றவை முதன்மை காரணங்களாக உள்ளன. முடி உதிர்வை கட்டுப்படுத்த என்ன மாதிரியான தவறுகளை செய்ய கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.    

2 /6

உங்கள் முடிக்கு அடிக்கடி கண்டிஷனிங் செய்வது முடி உதிர்வதற்கு வழிவகுக்கும். இதனால் முடி எளிதில் சேதமடைகிறது. இந்த பிரச்சனையை தவிர்க்க முடிக்கு எப்போதும் மென்மையான ஷாம்பு பயன்படுத்தவும்.   

3 /6

குளிர்காலத்தில் முடி உதிர்வை கட்டுப்படுத்த பலரும் முடிக்கு சூடான எண்ணெய் தடவுகின்றனர். ஆனால் இது உங்கள் முடிக்கு நன்மை பயக்காது, மாறாக முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். முடியை உள்ளிருந்து சேதப்படுத்தும்.  

4 /6

முடிக்கு அடிக்கடி கர்லிங் மற்றும் சூடான கருவிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். விசேஷ நாட்களில் எப்போதாவது பயன்படுத்துவது பிரச்சனை இல்லை என்றாலும், தினசரி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இது முடியை பலவீனமடைய செய்யும்.  

5 /6

உங்களுக்கு முடிக்கு இறுக்கமான சிகை அலங்காரங்கள் செய்வதை குறைத்து கொள்ளவும். இதன் மூலமும் முடி உதிர்வு அதிகரிக்கும். எப்போதும் தளர்வான ஜடை அல்லது முடிக்கு குறைந்த ஸ்டைல் ​​செய்யலாம்.  

6 /6

புகைபிடிப்பது புற்றுநோய்யை ஏற்படுத்தும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் புகைபிடிப்பது முடி உதிர்வையும் அதிகரிக்கிறது. எனவே முடி உதிர்வை கட்டுப்படுத்த புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும்.