காடு, மலை போன்ற இடங்களில் பழங்குடியினர் வசித்தாலும் கடலில் வசிக்கும் சில பழங்குடியின மக்கள் உள்ளனர். அவர்கள் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
உலகம் முழுவதும் பல்வேறு விதமான பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இன்றைய உலகில் பலர் மக்களுடன் சாதாரணமாக பழகினாலும், ஒரு சிலர் தனித்து வாழ விரும்புகின்றனர்.
அந்த வகையில் வெளியுலகை அதிகம் தெரியாமல் வாழ்ந்து வரும் பழங்குடியினர் தான் பவாஜ். இவர்கள் மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற கடல் பகுதிகளில் அதிகம் வசிக்கின்றனர். இவர்களை கடல் நாடோடிகள் என்றும் அழைக்கின்றனர்.
பவாஜ் இன மக்கள் எப்போதும் கடல் மற்றும் கடல் சார்ந்த பகுதிகளில் மட்டுமே தங்குகின்றனர். ஏதேனும் தேவை இருந்தால் மட்டுமே அரிதாக நிலப்பகுதிக்கு வருகின்றனர்.
கடலை சுற்றியே இவர்கள் வாழ்க்கை இருப்பதால் கடலை பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்கின்றனர். குறிப்பாக ஆழ்கடலில் நீந்துவது மற்றும் கடல் வாழ் உயிரினங்களுடன் இணைந்து இருப்பது போன்றவற்றை நன்கு தெரிந்திருக்கின்றனர்.
சாதாரண மனிதர்களை விட இந்த பவாஜ் பழங்குடியின மக்களால் ஆழ்கடலில் நீண்ட நேரம் இருக்க முடியும். இதனால் இவர்களுக்கு நீர் மனிதர்கள் என்றும் இன்னொரு பெயரும் உண்டு.
பவாஜ் மக்கள் பெரும்பாலானோர் முஸ்லிம் மதத்தை வழிபடுகின்றனர். நிலத்தில் கால் வைக்கவே பயப்படும் இவர்களுக்கு படிப்பறிவு மிகவும் கம்மியாக உள்ளது. இதனாலும் சாதாரண மக்களிடமிருந்து தள்ளியே உள்ளனர்.