BCCI About Kohli, Rohit Retirement: கடந்த மே மாதம் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ஒரு வாரத்திக்குள் விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இது ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியது. இந்த நிலையில், இது குறித்து பிசிசிஐ மெளனம் கலைத்துள்ளது. அது பற்றி இங்கு பார்க்கலாம்.
ஐபிஎல் நடந்துக்கொண்டிருக்கும்போது, அடுத்த இந்திய டெஸ்ட் கேப்டன் பற்றி பேச்சுகள் அடிப்பட்டுக்கொண்டிருந்தன. அந்த சமயத்தில் திடீரென மே 7ஆம் தேதி ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரை தொடர்ந்து விராட் கோலி மே 12ஆம் தேதி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக விராட் கோலி இன்னும் இரண்டு ஆண்டுகளாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,அவரும் ஓய்வை அறிவித்தது பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
இவர்களின் ஓய்வுக்கு பிசிசிஐ கொடுத்த அழுத்தம்தான் காரணமா? என்றும் ரோகித் ஓய்வு அறிவித்த பின்னர் விராட் கோலி கேப்டனாக இருக்க கேட்டு அதனை பிசிசிஐ மறுத்ததாகவும் கூறப்பட்டு வந்தது.
இந்த விவகாரத்தில் அமைதியாக இருந்த பிசிசிஐ, தற்போது மெளனம் கலைத்துள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா முதல்முறையாக பேசி உள்ளார்.
அவர் பேசியதாவது, அனைவருக்கும் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இல்லாததை நாம் அனைவருமே உணர்கிறோம். ஓய்வு முடிவு என்பது அவர்களாகவே எடுத்தது.
எவரையும் ஓய்வு பெறக்கூற கூடாது என்பது பிசிசிஐயின் கொள்கை. அவர்கள் இருவரும் சிறந்த பேட்டர்கள். அவர்களை நாம் நிச்சயமாக மிஸ் செய்கிறோம். மேலும் நல்ல விஷயம் என்னவென்றால், அவர்கள் இன்னும் ஒருநாள் போட்டிகளில் இருக்கிறார்கள் என கூறினார்.