Guru Peyarchi Horoscope in Tamil2025 : தீபாவளிக்கு முன்பு குருவில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட உள்ளது. இதில் குரு தனது ராசியை மாற்றப் போகிறார். இந்த முக்கிய மாற்றம் வரும் அக்டோபர் 18 ஆம் தேதி, குரு மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடைவார். இதற்குப் பிறகு, டிசம்பர் மாதம் குரு மீண்டும் மிதுன ராசிக்கு திரும்புவார்.
வருகிற அக்டோபர் 18 அன்று இரவு 09:39 மணிக்கு, அவர் கடக ராசிக்குள் நுழைப் போகிறார் குரு பகவான். மிதுன ராசியில் குரு பெயர்ச்சி அடையும் போது சில ராசிகளுக்கு நன்மை பயக்கும். இது ஐந்து ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தையும், நிதி, தொழில் மற்றும் வணிகத்தில் சாதகமான பலன்களைப் தருவார்.
1/8Guru Peyarchi In Kadagam: தீபாவளிக்கு முன்பு குருவின் ராசியில் மிகப்பெரிய மாற்றம் நிகழ உள்ளது. அதன்படி வருகிற அக்டோபர் 18 ஆம் தேதி, குரு மிதுனத்திலிருந்து கடகத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். இதற்குப் பிறகு, டிசம்பர் மாதம் குரு மீண்டும் மிதுன ராசிக்கு திரும்புவார். உண்மையில், குரு தற்போது அதிசாரி நிலையில் இருப்பதால், குருவின் இந்த மாற்றம் நிகழ்கிறது. செல்வம், அறிவு, ஞானம், மதம் மற்றும் ஆன்மீகத்திற்கு பெயர் பெற்ற குரு தீபாவளிக்கு முன் அதன் ராசியை மாற்றும். இதனால் எந்த ராசிக்காரர்கள் பயனடைவார்கள் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
2/8மிதுனம்: குருவின் பெயர்ச்சி மிதுன ராசிக்கு நன்மை பயக்கும். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாகும். பணம் சம்பாதிக்க உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும், எனவே இந்த நேரத்தில் எச்சரிக்கையுடன் இருக்கவும். பயணங்களும் நன்மை பயக்கும். நீங்கள் மன அழுத்தத்திலிருந்து விலகி அமைதியான மனதைப் பேணுவீர்கள்.
3/8கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கும். இது உங்களுக்கு மிகவும் நல்ல நேரத்தை தரும். உங்கள் சொத்து மற்றும் வருமானத்தில் ஆதாயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக முதலீடு செய்யப்பட்ட பணத்தை நீங்கள் திரும்பப் பெறலாம். நீங்கள் ஒரு வாகனம் கூட வாங்கலாம். வேலையில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் உள்ளன.
4/8விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் விரும்பிய பலன்களை அடைய வாய்ப்புள்ளது. முன்பு நீங்கள் இழப்புகளைச் சந்தித்த இடத்தில், இப்போது உங்களுக்கு லாபம் கிடைக்கும்.
5/8மகரம்: மகர ராசிக்காரர்கள் ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்யலாம். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புடன் நீங்கள் முன்னேறத்தை அடைவீர்கள். இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல சூழ்நிலைகள் உருவாகி வருகின்றன. பணம் ஒன்றிலிருந்து மட்டுமல்ல, பல மூலங்களிலிருந்தும் வரும்.
6/8மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு இது ஒரு நல்ல நேரம், ஏனெனில் கடந்த கால நிதி சிக்கல்கள் தீரும். உங்கள் வேலையில் வெற்றி சாத்தியமாகும், குறிப்பாக நீங்கள் தேர்வுகளுக்குத் தயாராகி வருகிறீர்கள் என்றால், கட்டாயம் வெற்றி கிடைக்கும்.
7/8குரு பகவானின் முழுமையான அருளை பெற இந்த மூல மந்திரத்தை கூறவும்: ஓம் ஷ்ரம் ஷ்ரீம் ஷ்ரௌம் ஸஹ் குரவே நமஹ! தினமும் இந்த மந்திரத்தை ஜபிக்கவும்
8/8பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.