Belly Fat Reduction Home Workouts : உடல் எடையை குறைக்க, சில உடற்பயிற்சிகள் உள்ளன. இவற்றை வீட்டில் செய்தாலே கண்டிப்பாக எடை குறையுமாம்.
Belly Fat Reduction Home Workouts : உடல் எடை என்பது குறைக்க முடியாத விஷயம் கிடையாது. இருப்பினும், இதை குறைக்க பலரும் படாத பாடு படுகின்றனர். இதை செய்ய, நாம் ஒழுக்கத்துடனும் விடாமுயற்சியுடனும் இருக்க வேண்டியது அவசியம் ஆகும். அப்படி நீங்கள் வீட்டில் செய்யக்கூடிய உடற்பயிற்சி என்னென்ன என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
ஜம்பிக் ஜாக்ஸ், நல்ல கார்டியோ உடற்பயிற்சியாக விளங்குகிறது. கலோரி எரிப்பை அதிகரித்து, பிடிவாதமான வயிற்று கொழுப்பை குறைக்கிறது.
ஸ்குவாட்ஸ் உடற்பயிற்சி தொடை மற்றும் கால் சதைகளை குறைப்பதோடு அது பின்னந்தசைகளையும் குறைக்கிறது. இது வளர்ச்சிதையை வேகப்படுத்தி, உடலில் கொழுப்பை குறைக்க உதவுகிறது.
மவுண்டன் க்ளைம்பர்ஸ், தீவிர கார்டியோ உடற்பயிற்சியாக விளங்குகிறது. இது வயிற்று பகுதி தசைகளை வலுப்படுத்தி, தொப்பையை குறைக்கிறது.
ரிவர்ஸ் கிரஞ்ச், வயிற்று தசைகளை குறைத்து கொழுப்பை குறைக்கும் உடற்பயிற்சிகளுள் ஒன்றாகும். இது இடுப்பை, ஷேப் ஆக ஆக்குவதோடு அடிவயிறு பெரிதாவதையும் குறைக்கிறது.
பைசைக்கிள் க்ரஞ்சஸ், வயிற்றின் கீழ் பகுதியை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளுள் ஒன்றாகும். இது, உங்கள் வயிற்றின் இரு பக்கங்களிலும் இருக்கும் சைட் சதைகளை குறைக்க உதவுகின்றது. இதனால் உங்கள் உடலில் இருக்கும் கொழுப்புகளும் குறைகின்றன.
ப்ளாங்க் உடற்பயிற்சி, உங்கள் வயிற்றின் மையப்பகுதியில் உள்ள தசையை குறைக்க உதவுகிறது. இது, கொழுப்பை எரிப்பதுடன் உங்கள் தோள்பட்டை மற்றும் வயிற்றையும் திடமாக வைத்துள்ளது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)