Benefits Of Guava Leaves: கொய்யா இலையை உட்கொண்டால் உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
கொய்யாப்பழம் உடலுக்கு எவ்வளவு நன்மை தறுகிறதோ அதே அளவில் கொய்யா இலையிலும் கள் (Guava Leaves) அதிக நன்மைகள் உள்ளது. இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருப்பது முதல் செரிமானத்தை சீராக்குவது வரை பல்வேறு நன்மைகள் அதில் அடங்கும்.
கொய்யா இலையின் நன்மைகள் குறித்து உங்கள் தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு.
ஆண்டிஆக்ஸிடன்ட், ஃபைபர் உள்பட பல ஊட்டச்சத்துக்கள் கொய்யா இலையில் நிறைந்திருக்கின்றன. அந்த வகையில் கொய்யா இலையை உட்கொள்வதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு காணலாம்.
கொய்யா இலையில் அதிக ஆண்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவரை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிகல்ஸை (Free Radicals) நீர்த்துப்போகச்செய்வதால் புற்றுநோய் செல்கள் வளரும் ஆபாயம் குறையும்.
ஃபைபர் அதிகம் இருப்பதால் மலச்சிக்கலை தவிர்க்க உதவும். ஒட்டுமொத்தமாக செரிமானம் சீராக இருக்கும்.
கொய்யா இலையில் மன அழுத்தத்தை குறைக்கும் பண்புகள் நிறைந்திருக்கின்றன.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான கருத்துகள் மற்றும் வீட்டு வைத்தியம் சார்ந்த தகவல்களின் அடிப்படையில் உங்களின் புரிதலுக்காக எழுதப்பட்டவை. இதனை பின்பற்றும் முன்னர் நீங்கள் நிச்சயம் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். இவற்றை Zee News உறுதிசெய்யவில்லை.