இந்த வெயில் காலத்தில் நுங்கு சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா?
கோடைக்காலத்தில் நுங்கு உடலுக்கு மிகவும் நல்லது. லிச்சி பழங்களில் உள்ளது போலவே இனிப்பு மற்றும் மென்மையான சுவை கொண்டுள்ளது.
நுங்கில் கலோரிகள் குறைவாக இருப்பதால், அவற்றை தினசரி சாப்பிட்டாலும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. நுங்கு செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு நுங்கு சாப்பிடுவது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகப்படுத்தாது.
கோடை காலத்தில் சரும பிரச்சனைகளை தவிர்க்க நுங்கு உதவுகிறது. இது சருமத்திற்கு தேவையான தண்ணீர் சத்துக்களை வழங்குகிறது. மேலும், கூந்தலை வறண்டு போகாமல் காக்கிறது. இது இயற்கையான கண்டிஷனராக முடியை பலப்படுத்துகிறது.
நுங்கு பழங்களில் உள்ள அதிகப்படியான தண்ணீர் நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் தேவையில்லாத உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க முடியும்.