உடல் பருமன் முதல் மலச்சிக்கல் வரை... தினம் 5-6 ஊற வைத்த உலர் திராட்சை போதும்

உலர் திராட்சை ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் சூப்பர்ஃபுட். அதில் உள்ள ஏராளமான சத்துக்கள், நமது உடலுக்கு ஆற்றலை அள்ளி வழங்குவதோடு, பல விதமான உடல் நல பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது.

உங்கள் நாளை  4 -5 ஊற வைத்த உலர் திராட்சையுடன் தொடங்கினால், அது உங்கள் ஆரோக்கியத்தில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரும். இரவில் ஊற வைத்த உலர் திராட்சையிய, அதன் நீருடன் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்

1 /8

உலர் திராட்சையில் உள்ள நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் பி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடல் உறுப்புகளை பலப்படுத்துகிறது. ஒவ்வொரு நரம்புகளுக்கும் எஃகு போன்ற வலிமைகொடுத்து, உடலுக்கு கிடைக்கும் ஆற்றல் 100% வேகத்தில் இயங்க வைக்கும்.

2 /8

ஆஸ்டியோபோரோசிஸ்: எலும்புகளை வலுப்படுத்த உதவும் கால்சியம் மற்றும் போரான் ஆகியவை உலர் திராட்சையில் ஏராளமாகக் காணப்படுகின்றன. உலர் திராட்சை மற்றும் அதன் நீரை தொடர்ந்து குடிப்பதால் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கலாம்.

3 /8

உடல்  பருமன்: எடையை குறைக்க நினைப்பவர்கள் உலர் திராட்சையை சாப்பிடுவது பலன் தரும். வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துடன் செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுவதன் மூலம் உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

4 /8

இதய ஆரோக்கியம்: உலர் திராட்சை நீரில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. கொழுப்பின் அளவைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.

5 /8

மலச்சிக்கல்: மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்க, உலர் திராட்சையை உட்கொள்வது பலன் தரும். திராட்சையில் அதிக நார்ச்சத்து உள்ளதால், இது செரிமானத்தை மேம்படுத்துவதுடன், குடலை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.

6 /8

இரத்த சோகை: உலர் திராட்சைகள் இரும்புச் சத்தின் நல்ல மூலமாகும். எனவே, ஹீமோகுளோபின் உற்பத்திக்கு உதவுகிறது. உலர் திராட்சை மற்றும் அதன் நீரைக் குடிப்பது உடல் இரும்புச்சத்தை உறிஞ்சும் திறனையும் மேம்படுத்துகிறது. இது இரத்த சோகையை நீக்கி ஆற்றல் அளவை அதிகரிக்க உதவுகிறது.

7 /8

சரும ஆரோக்கியம்: உலர் திராட்சை நீரில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன, அவை சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கின்றன. இது சருமத்தை உள்ளிருந்து ஊட்டமளிக்கிறது, இதன் மூலம் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தி முதுமை அறிகுறிகளைக் குறைக்கிறது.

8 /8

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.