இளநீர் என்பது வெயில் காலத்தில் மட்டுமல்லாமல், எல்லா பருவ காலங்களிலும் அருந்த வேண்டிய மிகச்சிறந்த ஆரோக்கிய பானம். காரணம் அதில் உள்ள மினரல்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கின்றன.
இளநீரின் ஊட்டசத்து முழுமையாக உடலுக்குக் கிடைக்கவேண்டுமெனில் வழுக்கையோடு சேர்த்து குடிக்க வேண்டும் எங்கின்றனர் உணவியல் நிபுணர்கள். இளநீரில் பொட்டாசியம், கால்சியம் அதிகம் இருக்கும் நிலையில் வழுக்கையில் மற்ற ஊட்டச்சத்துகள் அதிகமாக இருக்கின்றன.
இளநீர் சுவையானது மட்டுமல்ல, மிக மிக ஆரோக்கியமான பானம். இதில் பொட்டாஷியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், துத்தநாகம், தாமிரம், வைட்டமின் சி, கால்சியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
இளநீரில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவும் முக்கிய தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. எனவே சரும ஆரோக்கியத்திற்கான சிறந்த பானம்.
உடல் பருமனாக உள்ளவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் இளநீர் அருந்துங்கள். குறைந்த அளவு கலோரி உள்ள இந்த பானம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, இதில் உள்ள பயோஆக்டிவ் என்சைம்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
இதயப் பிரச்சனை, இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் தினமும் இதனை குடிக்க வேண்டும். இதில் உள்ள பொட்டாசியம் சத்து இதய துடிப்பையும் சீராக்கும்.
செரிமான பிரச்சனைகளை நீங்கவும், மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மையிலிருந்தும் விடுபடவும், இளநீர் உதவும். இதனை தினமும் குடிப்பதால் செரிமான மண்டலம் வலுவடையும்.
வாந்தி மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகளின் போது, எலக்ட்ரோலைட்டுகள் உள்ள இள நீரை உட்கொள்வதன் மூலம் பிரச்சனையிலிருந்து விடுபடலாம். அதோடு நீர்சத்தும் குறையாமல் இருக்கும்
தினமும் இளநீரை குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் பிரச்சனையை தீர்க்கலாம். சிறுநீரகத்தில் இருக்கும் கற்கள் கரைக்கப்பட்டு சிறுநீர் பாதை வழியாக வெளியேறும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.