லட்சக்கணக்கான ரூபாய் சேமிக்கலாம்.. பெண்களுக்கான 5 முக்கிய அரசுத் திட்டங்கள்

Top 5 Government Schemes For Women: 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டுக்குப் பிறகு லட்சக்கணக்கான பெண்களுக்கான ஐந்து முக்கிய அரசுத் திட்டங்களின் நன்மைகள் என்ன? அதன் விவரங்கள்

Best Schemes For Women: பெண்களின் எதிர்காலத்திற்காக சேமிக்கத் திட்டமிடுபவர்களுக்கு மிகவும் மிகவும் பயனுள்ளதாக ஐந்து திட்டங்கள் குறித்து பார்ப்போம். அதில் முதலீடு செய்வதன் மூலம், பணத்தை சேமிக்கலாம், வருமானத்தையும் ஈட்டலாம்.

1 /8

பெண்கள் ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். அது இராணுவம் போன்ற சவாலான வேலையாக இருந்தாலும் சரி, மருத்துவர் போன்ற பொறுப்பான பணியாக இருந்தாலும் சரி. அவர்களின் நிதி வளர்ச்சியை ஆதரிக்க, மத்திய மற்றும் அரசாங்கம் பல நன்மை பயக்கும் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. 

2 /8

பெண்களுக்கு பயனளிக்கும் வகையில் அரசாங்கம் தொடர்ந்து பல்வேறு திட்டங்களைத் தொடங்குகிறது. இன்று முதலீடு செய்தால், நாளை உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உங்களுக்கான ஐந்து சிறந்த அரசு திட்டங்களைப் பற்றி தெரிந்துக்கொள்ளுவோம். 

3 /8

2015 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், "பேட்டி பச்சாவ், பேட்டி படாவோ" முயற்சியின் ஒரு பகுதியாக செல்வ மகள் சேமிப்பு திட்டம் (Sukanya Samriddhi Yojana) தொடங்கப்பட்டது. இது 8.2% வருடாந்திர வட்டி வருமானத்தை வழங்குகிறது. மேலும் இது வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கு அளிக்கிறது. இதில் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் கணக்கு தொடங்கலாம். நீங்கள் ரூ.250 முதல் முதலீடு செய்யத் தொடங்கலாம். 14 ஆண்டுகள் வரை முதலீடு செய்யப்படும். 

4 /8

ஒடிசாவில் பெண்களுக்காகத் தொடங்கப்பட்ட சுபத்ரா யோஜனா (Subhadra Yojana) திட்டம் 21-60 வயதுடைய பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஒடிசாவில் பெண்களுக்கு நிதி ரீதியாக அதிகாரம் அளிப்பதே இதன் நோக்கம். இந்தத் திட்டத்தின் கீழ், ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.50,000 நிதி உதவி வழங்கப்படுகிறது.

5 /8

மகாராஷ்டிரா அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த என் அன்பு சகோதரி திட்டம் (Majhi Ladki Bahin Yojana tamil), 21-65 வயதுடைய பெண்களுக்கு பயனளிக்கிறது. தகுதியுள்ள பெண்களுக்கு மாதத்திற்கு ரூ.1,500 வழங்குகிறது. பெண்களை நிதி ரீதியாக சுதந்திரமாக மாற்றுவதே இதன் குறிக்கோள், இருப்பினும் விண்ணப்பதாரர்கள் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.

6 /8

2023 இல் தொடங்கப்பட்ட இந்த மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் (Mahila Samman Saving Certificate), பெண்கள் ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்ய அனுமதிக்கிறது. இது முதலீடுகளில் 7.5% வருமானத்தை வழங்குகிறது. தங்கள் பணத்தைப் பாதுகாப்பாகச் சேமித்து வளர்க்க விரும்பும் பெண்களுக்கு இது ஒரு சிறந்த வழி.

7 /8

பள்ளி மாணவிகளுக்கு, குறிப்பாக பட்டியல் பழங்குடியினர் மற்றும் பட்டியல் சாதியினருக்கு NSIGSE (National Savings Incentive for Girls’ Education) ஒரு சிறந்த தேர்வாகும். இது பள்ளியில் படிக்கும் சிறுமிகளுக்கு ரூ. 3,000 நிதி உதவி வழங்குகிறது.

8 /8

இந்த ஐந்து மத்திய அரசு திட்டங்கள் பெண்களுக்கு பல்வேறு நிதி சலுகைகளை வழங்குகின்றன, சேமிப்பு மற்றும் வளர்ச்சி இரண்டையும் உறுதி செய்கின்றன.