சுகர் லெவலை சூப்பராய் குறைக்க உதவும் 7 பெஸ்ட் வழிகள்: ட்ரை பண்ணி பாருங்க

Diabetes Control Tips: நீரிழிவு நோயாளியா நீங்கள்? சுகர் லெவலை கட்டுப்படுத்த வேண்டுமா? இதோ உங்களுக்கான சில எளிய டிப்ஸ்.

Healthy Habits For Diabetes Control: நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் 7 எளிய வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். இதன் மூலம் சுகர் அளவு கட்டுக்குள் இருப்பதோடு உடல் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

1 /12

இன்றைய காலகட்டத்தில், மோசமான உணவுப் பழக்கம், மோசமான வாழ்க்கை முறை மற்றும் குறைவான உடல் செயல்பாடு காரணமாக, நீரிழிவு உட்பட பல கடுமையான நோய்களின் ஆபத்து மக்களிடையே அதிகரித்து வருகிறது. நாட்டிலும் உலகிலும் நீரிழிவு நோயாளிகள் அதிகரித்து வருவது, முழு உலகிற்கும் ஒரு சவாலாக உள்ளது.

2 /12

நீரிழிவு நோயாளிகள் ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டியது மிக அவசியமாகும். சுகர் நோயாளிகளுக்கு உணவுக் கட்டுப்பாடு மிக அவசியம்.

3 /12

சில எளிய இயற்கையான வழிகளில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம். இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் 7 எளிய வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். இதன் மூலம் சுகர் அளவு கட்டுக்குள் இருப்பதோடு உடல் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

4 /12

நீரிழிவு நோயாளிகளுக்கு உடல் செயலபாடுகள் மிக அவசியம். விறுவிறுப்பான நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், நடனம், கயிறு தாண்டுதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் போன்ற செயல்களை சுகர் நோயாளிகள் செய்யலாம். இந்தப் பயிற்சியை அரை மணி நேரம் முதல் 45 நிமிடங்கள் வரை செய்தால், நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் பெருமளவு குறையும், மற்ற நோய்களின் அபாயமும் குறையும்.

5 /12

பீட்சா, பர்கர், வறுத்த உணவுகள், துரித உணவுகள், ஜங்க் உணவுகள், பேக் செய்யப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சிவப்பு இறைச்சி, இனிப்பு உணவுகள், உப்பு நிறைந்த உணவுகள், மதுபானம், சிகரெட் ஆகியவற்றை  அதிகமாக உட்கொண்டால், நீரிழிவு நோய்க்கான ஆபத்தும் அதிகரிக்கும். 

6 /12

நீரிழிவு நோயாளிகள் எப்போது ஆரோக்கியமான உணவுகளையே உட்கொள்ள வேண்டும். பருவகால பச்சை காய்கறிகள், இலை காய்கறிகள், பழங்கள், ஆண்டிஆக்சிடெண்ட்கள் நிறைந்த பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்ப்பது நல்லது.

7 /12

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நீரிழிவு நோயைத் தடுக்க உதவுவது மட்டுமல்லாமல், இன்னும் பல நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது. ஆகையால், தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்.

8 /12

உடல் பருமன் காரணமாகவும் நீரிழிவு நோய் ஏற்படலாம். ஆகையால் எப்போதும் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது மிக அவசியமாகும். உடற்பயிற்சி மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட உணவு முறையால் எடை குறையவில்லை என்றால், நிபுணர் ஆலோசனையைப் பெறவும்.

9 /12

இது தவிர, புகைபிடிப்பது மற்றும் மதுபானத்திலிருந்து விலகி இருப்பது நல்லது. இந்த இரு பழக்கங்களும் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும். 

10 /12

மன அழுத்தத்தை நிர்வகிப்பதில் கவனம் செலுத்துங்கள். இதற்கு, நீங்கள் யோகா, தியானம், நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி போன்றவற்றின் உதவியை பெறலாம்.

11 /12

போதுமான தூக்கம் மிக அவசியமாகும். தினமும் குறைந்தபட்சம் 7-8 மணி நேரம் தூங்க வேண்டியது மிக அவசியம். தூக்கமின்மையும் நீரிழிவு நோயை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்வது நல்லது.

12 /12

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.