Liver Detox: கல்லீரல், உடலை சுத்திகரிக்கும் ஒரு பாக்டரி ஆக விளங்குகிறது என்றால் மிகை இல்லை. கல்லீரல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால், கடுமையான உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். உயிரிழக்கும் அபாயம் கூட ஏற்படலாம்.
நோய் நொடி இல்லாமல் வாழ, கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இந்நிலையில் கல்லீரலில் சேரும் நச்சுக்களையும், அழுக்குகளையும், கொழுப்பையும் நீக்கும் ஆற்றல் கொண்ட சிறந்த டீடாக்ஸ் பானங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
இன்றைய வாழ்க்கை முறையால், கொழுப்பு கல்லீரல் உள்ளிட்ட கல்லீரல் சாய்ந்த பிரச்சினைகள், அதிகரித்துள்ளன. குடிப்பழக்கம் இருப்பவர்கள் இல்லாதவர்கள் என அனைவருக்கும் கல்லீரல் பிரச்சனை உள்ளது.
கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, அவ்வப்போது அதனை டீடாக்ஸ் செய்வது அவசியம். இதற்கு உதவும் சில எளிய பானங்களை பற்றி அறிந்து கொள்ளலாம். இவற்றை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது சிறந்த பலன் தரும்.
நெல்லிக்காய் கல்லீரல் நச்சுக்களை நீக்கும் மிகச்சிறந்த உணவு. இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், ஆன்ட்டி பாக்டீரியல் பண்புகள், கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்கும் ஆற்றல் கொண்டது.
இரும்பு சத்துக்களும், ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட் பண்புகளும் நிறைந்த மாதுளை, கல்லீரலில் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். கொழுப்பை எரிக்கும் ஆற்றல் கொண்டதால், கொழுப்பு கல்லீரலுக்கும் சிறந்த மருந்தாக இருக்கும்.
பீட்ரூட்டில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் இரும்பு சத்து, கல்லீரலை பீட்டாக் செய்து, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். கொழுப்பை எரிக்கும் திறன் பெற்றதால், கொழுப்புக் கல்லீரல் பிரச்சனை நீங்கவும் உதவும்.
நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த பப்பாளி, கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அருமருந்தாக இருக்கும். இதன் நார்ச்சத்தை முழுமையாக பெற, இதனை ஸ்மூத்தியாக அருந்துவது சிறந்தது.
ஆயுர்வேதத்தில் மஞ்சள் பால் பல நோய்களை தீர்க்கும் அருமருந்தாக பயன்படுத்தப்படுகிறது. கல்லீரலில் உள்ள செல்கள் புத்துணர்ச்சி பெறவும், புதிய செல்கள் உருவாகவும் உதவி, கொழுப்பு கல்லீரல் பிரச்சனையை தீர்க்க உதவுகிற
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.