யூரிக் அமில பிரச்சனை: உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால், எலும்புகள் கொஞ்சம் கொஞ்சமாக பலவீனமடையத் தொடங்குகின்றன. இதனால் கால்களில் வீக்கமும், விறைப்பும் ஏற்பட்டு, நடக்க முடியாமல் பிரச்சனை ஏற்படுகிறது.
உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக உள்ளவர்கள், அதை கட்டுப்படுத்த, டயட்டில் கவனம் செலுத்த வேண்டும். நம் அன்றாட உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறைகளில் மாற்றங்களைச் செய்யவதன் மூலமும் இந்த தொல்லையில் இருந்து விடுபடலாம்.
1/10யூரிக் அமிலம் என்பது நமது உடலில் உள்ள ஒரு வகையான கழிவுப் பொருள். இது பியூரின் என்ற வேதிப்பொருள் முறிவதால் உருவாகிறது. சிறுநீரகங்கள் யூரிக் அமிலத்தை வடிகட்டி, சிறுநீர் மூலம் உடலில் இருந்து வெளியேற்றுகின்றன. ஆனால், அளவிற்கு அதிகமானால், சிறுநீரகங்களால் வெளியேற்ற முடியாமல், மூட்டுகளைச் சுற்றி படிகங்களாக சேரத் தொடங்குகிறது.
2/10எலுமிச்சை ஜூஸ்: வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை ஜூஸ், யூரிக் அமிலத்தை நீக்க உதவும். உடல் எடையை குறைக்கவும் இதய ஆரோக்கியத்திற்கும் இது நன்மை பயக்கும்
3/10இஞ்சி: அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ள இஞ்சி யூரிக் அமிலம் மற்றும் கீல்வாதம் தொடர்பான வீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும் சிறந்த உணவு.
4/10மஞ்சள்: மஞ்சளில் உள்ள குர்குமின், அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, இது யூரிக் அமில அளவைக் குறைப்பதில் நன்மை பயக்கும்.
5/10கிரீன் டீ: ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் நிறைந்த கிரீன் டீ யூரிக் அமில அளவைக் குறைக்கவும் கீல்வாதத்தைத் தடுக்கவும் உதவும்.
6/10துளசி நீர்: துளசி இலைகள் உடலில் சேரும் நச்சுகளை நீக்க உதவும். அதிக யூரிக் அமிலத்துடன் தொடர்புடைய உடல் வீக்கத்தைக் குறைக்க உதவும்.
7/10ஓமம் நீர்: ஓமம் செரிமானத்தை மேம்படுத்துவதோடு, யூரிக் அமிலம் உள்ளிட்ட நச்சுக்களை வெளியேற்றவும் உதவும்.
8/10தண்ணீர்: போதுமான அளவு தண்ணீர் குடிப்பது சிறுநீர் வழியாக அதிகப்படியான யூரிக் அமிலத்தை வெளியேற்ற உதவுகிறது.
9/10உடற்பயிற்சி: வழக்கமான உடல் செயல்பாடு, யூரிக் அமில அளவை குறைக்க உதவுவதோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தவும் உதவும்.
10/10பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.