மூட்டு வலி, கீல்வாதத்தை ஏற்படுத்தும்... யூரிக் அமிலத்தை ஒழித்துக் கட்டும் சில மேஜிக் உணவுகள்

Published: Apr 25, 2025, 08:34 AM IST|Updated: Apr 25, 2025, 08:34 AM IST

உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால், மூட்டு வலி கீல் வாதம் மட்டுமல்லாது, சிறுநீரக கற்கள், இதய நோய்கள் ஆகிய பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே அதனை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

இன்றைய மோசமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் காரணமாக, யூரிக் அமில பிரச்சனை பலருக்கு உள்ள நிலையில், யூரிக் அமிலத்தை இயற்கையாக உடலில் இருந்து நீக்க உதவும் சில உணவுகளை அறிந்து கொள்ளலாம்.

Uric Acid1/8

யூரிக் அமிலம்

உடலில் யூரிக் அமிலம் என்னும் கழிவு, உடலில் ப்யூரின் எனப்படும் ஒரு தனிமம் முறிவதன் மூலம் உண்டாகிறது. பியூரின் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டால் யூரிக் அமில பிரச்சனை அதிகரிக்கலாம். இதற்கு இயற்கை தீர்வு தரும் உணவுகளை அறிந்து கொள்ளலாம்.

Walnut2/8

வாதுமை பருப்பு

வைட்டமின் ஈ, ஆரோக்கியமான கொழுப்புகள், ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்த வாதுமை பருப்பு யூரிக் அமிலத்தை கரைத்து உடலில் இருந்து வெளியேற்ற உதவும். தினமும் இரண்டு மூன்று வாதுமை பொருட்களை உட்கொண்டால் நல்ல பலன் காணலாம்.

 

Coriander3/8

கொத்தமல்லி

கொத்தமல்லி என்னும் அற்புத மருத்துவ குணம் கொண்ட இலைகளில் ஆண்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் கொண்ட கொத்தமல்லி யூரிக் அமில படிகங்களை கரைத்து வெளியேற்றுகிறது.

Citrus Fruits4/8

சிட்ரஸ் பழங்கள்

வைட்டமின் சி நிறைந்த பழங்கள் யூரிக் அமிலப் பிரச்சனையில் இருந்து விடுபட உதவும். எலுமிச்சை ஆரஞ்சு, நெல்லிக்காய் போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகள் யூரிக் அமில அளவை குறைக்கும் ஆற்றல் கொண்டவை.

Tulsi5/8

துளசி இலைகள்

ஆயுர்வேதத்தில் சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படும் துளசி இலைகள், யூரிக் அமிலத்தை கரைத்து வெளியேற்றும் ஆற்றல் கொண்டவை. இது மட்டுமல்லாமல் உடலில் சேரும் பிறவாகி நச்சுக்கள் மற்றும் கழிவுகளும். ஆக்சிஜனேற்ற பண்புகள் நிறைந்த துளசி இலைகளை அப்படியே சாப்பிடலாம் அல்லது கசாயம் செய்து குடிக்கலாம்.

Moringga leaves6/8

முருங்கைக் கீரை

ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக விளங்கும் முருங்கைக்கீரை ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்தது. இது யூரிக் அமிலத்தை கரைத்து வெளியேற்றும். இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை குறைத்து செல்கள் பாதிக்கப்படாமல் காக்கின்றன.

Fenugreek7/8

வெந்தயம்

வெந்தயம் யூரிக் அமிலத்தை குறைக்கும் இயற்கை மருந்து. யூரிக் அமில படிகங்களை கரைக்க உதவும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இதில் நிறைந்துள்ளன. உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி இரத்தத்தை சுத்தம் செய்யும் ஆற்றலும் இதற்கு உண்டு.

Disclaimer8/8

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.