நம் உடலுக்கு ஆரோக்கியமாக இருக்க ஓரளவிற்கு கொலஸ்ட்ரால் அல்லது கொழுப்பு தேவை, ஆனால் அளவிற்கு அதிகமாக இருப்பது, மாரடைப்பு அல்லது இதய நோய்களை ஏற்படுத்தும். எனினும் டயட்டின் மூலம் கொலஸ்ட்ராலை சிறப்பாக கட்டுப்படுத்தலாம்.
உடலில் உள்ள கொழுப்பை இயற்கையாகவே குறைக்க சில பழங்கள் பெரிதும் உதவும். இதனை தினமும் வழக்கமான உணவில் சேர்க்கப்படும்போது கொலஸ்ட்ரால் பெருமளவு கட்டுப்படுத்தப்படும். கொழுப்பை எரிக்க எந்த பழங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
1/8நமது இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அல்லது கொழுப்பு எனப்படும் மெழுகு போன்ற பொருள் உள்ளது. இது உடல் செல்களை உருவாக்கத் அவசியம். ஆனால் அதன் அளவு அதிகரித்தால், இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். நமது அன்றாட உணவில் சேர்க்கக்கூடிய சில பொதுவான பழங்கள், கொழுப்பைக் குறைக்க உதவும்.
2/8பழங்களில் உள்ள நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலை எரித்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. அதோடு உடலுக்கு ஆற்றலை அள்ளி வழங்கி நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவுகின்றன.
3/8சிட்ரஸ் பழங்கள்:ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி மற்றும் திராட்சைப்பழம் போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. அதோடு அவற்றில் உள்ள பெக்டின் எனப்படும் நார்ச்சத்தும் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. மேலும், அவற்றில் காணப்படும் ஃபிளாவனாய்டுகள் இரத்த நாளங்களை தளர்த்தி வீக்கத்தைக் குறைக்கின்றன
4/8ஆப்பிள்: ஆப்பிளில் உள்ள பெக்டின் நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் (பாலிபினால்கள் போன்றவை). இதயத்தைப் பாதுகாக்கின்றன. நரம்புகளின் வீக்கத்தைக் குறைக்கின்றன. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது.
5/8வெண்ணெய் பழம்: நல்ல கொழுப்பைக் கொண்ட (மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு) பழமான, வெண்ணெய் பழம் LDL கொலஸ்ட்ராலை குறைத்து HDL கொலஸ்ட்ராலை அதிகரிக்க உதவுகிறது.
6/8வாழைப்பழம்: வாழைப்பழத்தில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் தாவர ஸ்டெரோல்கள், உடலில் கொழுப்பு உறிஞ்சப்படுவதைத் தடுக்கின்றன. அவை செரிமான அமைப்பை மேம்படுத்துவதோடு, உடல் எடையிய கட்டுக்குள் வைக்க உதவுகின்றன இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
7/8பழங்கள்: சரியான முறையில் சாப்பிடும்போது மட்டுமே அதிகபட்ச பலனை பெற இயலும். நார்ச்சத்து மூழ்மையாக கிடைக்க முடிந்த வரை பழங்களை தோலுடன் சாப்பிடுங்கள். புதிய பழங்களை சாப்பிடுங்கள், சாறுகள் வடிவில் எடுத்துக் கொள்வதன் மூலம் நார்ச்சத்தை இழந்து விடுவோம். எனவே அவற்றைத் தவிர்க்கவும்.
8/8பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.