சுகர் லெவலை சுலபமாய் குறைக்க உதவும் சிறந்த வீட்டு வைத்தியங்கள்: ட்ரை பண்ணி பாருங்க

Foods for Diabetes Control: சுகர் நோயாளியா நீங்கள்? சில எளிய உணவுகளின் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Diabetes Control Tips: நீரிழிவு நோய் மிகப்பெரிய வாழ்க்கை முறை நோயாக உருவெடுத்து வருகின்றது. இரத்த சர்க்கரை அளவு அதிகமானால், அது இதயம், சிறுநீரகங்கள், கண்கள் மற்றும் நரம்புகளுக்கு சேதத்தை ஏற்படுத்தும். ஆகையால், இதை கட்டுக்குள் வைக்க வேண்டியது மிக அவசியமாகும்.

1 /9

உலகளவில் நீரிழிவு நோய் வேகமாகப் பரவி வருகிறது. ஏராளமான இளைஞர்கள் இதற்கு பலியாகி வருகின்றனர். உடலில் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்யவோ அல்லது அதை சரியாகப் பயன்படுத்தவோ முடியாதபோது, ​​இரத்த சர்க்கரை அளவு உயர்கிறது. சரியான நேரத்தில் கட்டுப்படுத்தப்படாவிட்டால், அது இதயம், சிறுநீரகங்கள், கண்கள் மற்றும் நரம்புகளுக்கு சேதத்தை ஏற்படுத்தும்.

2 /9

இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் சில ஆரோக்கியமான உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.  

3 /9

நாவல் பழம் மட்டுமல்ல, அவற்றின் விதைகளும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உலர்ந்த நாவல் விதைகளை பொடியாக அரைத்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் அரை டீஸ்பூன் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கவும். இது உடலில் சர்க்கரை உறிஞ்சப்படுவதை மெதுவாக்குகிறது, இன்சுலின் செயல்பாட்டை அதிகரிக்கிறது.

4 /9

காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலைகளை மென்று சாப்பிடுவது சுகர் நோயாளிகளுக்கு நல்லது. ஏனெனில் கறிவேப்பிலை ஃபாஸ்டிங் இரத்த சர்க்கரையைக் குறைக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

5 /9

இலவங்கப்பட்டை உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடலில் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது. தினமும் காலையில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் இரண்டு சிட்டிகை இலவங்கப்பட்டை பொடியைக் கலந்து குடிப்பது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. இதை கிரீன் டீயிலும் கலந்து குடிக்கலாம்.

6 /9

பாகற்காய் இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தும் பல சேர்மங்களைக் கொண்டுள்ளது. பாகற்காய் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது, கணையத்தை இன்சுலின் உற்பத்தி செய்ய செயல்படுத்துகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாற்றைக் குடிப்பது ஒரு சிறந்த வீட்டு வைத்தியமாக கருதப்படுகின்றது. இது கசப்பான சுவை கொண்டதாக இருந்தாலும், நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது.

7 /9

நெல்லிக்காய் வைட்டமின் சி நிறைந்துள்ளது மற்றும் கணையத்தை இன்சுலின் வெளியிட செயல்படுத்த உதவுகிறது. வெறும் வயிற்றில் தினமும் ஒரு டீஸ்பூன் நெல்லிக்காய் சாற்றை உட்கொள்வது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. நெல்லிக்காய் பொடியை தேன் அல்லது வெதுவெதுப்பான தண்ணீருடன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.

8 /9

நீரிழிவு நோயாளிகள் வெந்தய நீரையும் குடிக்கலாம். வெந்தய நீரை உட்கொள்வது ஃபாஸ்டிங்க் சுகர் அளவை வெகுவாக குறைக்க உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றது.

9 /9

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.