தட்கல் டிக்கெட் ரூல்.. . இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு

Written ByVijaya Lakshmi
Published: Apr 28, 2025, 05:33 PM IST|Updated: Apr 28, 2025, 05:33 PM IST

நாட்டின் உயிர்நாடியாக இந்திய ரயில்வே இயங்கி வருகிறது. தினமும் கோடிக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். அதே நேரத்தில், பயணிகளின் வசதிக்காக ரயில்வே ஒவ்வொரு நாளும் பல மாற்றங்களைச் செய்து வருகிறது. இது தொடர்பாக, தற்போது ரயில் பயணிகளுக்கு புதிய விதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே வரும் மே 1, 2025 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செயல்பாட்டில் முக்கியமான மாற்றங்களை செய்யயுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய விதிகள் டிக்கெட் முன்பதிவு, கட்டணங்கள், ரீஃபண்ட் செயல்முறை மற்றும் பயண அனுபவத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். 

Indian Railways1/8

இந்திய ரயில்வே

நாட்டின் உயிர்நாடியாக இந்திய ரயில்வே இயங்கி வருகிறது. தினமும் கோடிக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். அதே நேரத்தில், பயணிகளின் வசதிக்காக ரயில்வே ஒவ்வொரு நாளும் பல மாற்றங்களைச் செய்து வருகிறது. இது தொடர்பாக, தற்போது ரயில் பயணிகளுக்கு புதிய விதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

 

Waiting ticket2/8

வெயிட்டிங் டிக்கெட்

வெயிட்டிங் டிக்கெட்: வெயிட்டிங் டிக்கெட்டுகள் தொடர்பாக ரயில்வே ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. இப்போது ஸ்லீப்பர் அல்லது ஏசி பெட்டிகளில் வெயிட்டிங் டிக்கெட்டுகள் செல்லாது. வெயிட்டிங் டிக்கெட்டுகளில் பயணம் செய்வது பொதுப் பெட்டிகளில் மட்டுமே அனுமதிக்கப்படும். முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் வெயிட்டிங் டிக்கெட்டுடன் பயணிப்பது கண்டறியப்பட்டால், அந்த நபருக்கு அதிக அபராதம் விதிக்கப்படும்.

 

Reservation rule3/8

முன்பதிவு ரூல்

முன்பதிவு ரூல்: முந்தாக முன்பதிவு காலம் (ARP) 120 நாட்களில் இருந்த நிலையில் தற்போது 60 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இனி பயணிகள் 60 நாட்களுக்கு முன்பே ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துக் கொள்ள முடியும்.

 

Tatkal ticket booking4/8

தட்கல் டிக்கெட் முன்பதிவு

தட்கல் டிக்கெட் முன்பதிவு: தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் சரிபார்ப்பு இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தவிர, உறுதிப்படுத்தப்பட்ட தட்கல் டிக்கெட்டுகளுக்கு ரீஃபண்ட் பெற முடியாது.

 

Tatkal ticket booking window5/8

தட்கல் டிக்கெட் முன்பதிவு விண்டோ

தட்கல் டிக்கெட் முன்பதிவு விண்டோ: தட்கல் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு ஏசி வகுப்புக்கு காலை 10 மணிக்கும், ஏசி அல்லாத வகுப்புகளுக்கு காலை 11 மணிக்கும் இருக்கும்.

 

Increase in charges6/8

கட்டணங்களில் அதிகரிப்பு

கட்டணங்களில் அதிகரிப்பு: மே 1 முதல் ரயில்வே மூன்று முக்கிய கட்டணங்களை உயர்த்தியுள்ளது. ரயில்வே முன்பதிவு, சூப்பர்ஃபாஸ்ட் மற்றும் தட்கல் கட்டணங்களை அதிகரித்துள்ளது.

 

Changes in food service7/8

உணவு சேவையில் மாற்றங்கள்

உணவு சேவையில் மாற்றங்கள்: இனி பயணிகள் முன்பதிவு செய்யாமலேயே உணவு வாங்க முடியும். பயணிகளுக்கு தரம் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு ரயிலிலும் மெனு மற்றும் கட்டண அட்டைகள் காட்சிப்படுத்தப்படும்.

 

New guidelines regarding identity proof8/8

அடையாளச் சான்று தொடர்பான புதிய வழிகாட்டுதல்

அடையாளச் சான்று தொடர்பான புதிய வழிகாட்டுதல்: இனி டிக்கெட் முன்பதிவு செய்யும் போது உள்ளிடப்பட்ட அடையாளச் சான்றை பயணத்தின் போது எடுத்துச் செல்ல வேண்டும். பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்குவதே இந்த மாற்றங்களின் நோக்கமாகும் என்று ரயில்வே கூறியுள்ளது.