அஸ்தமனமானார் குரு: யாருக்கு லாபம், யாருக்கு மோசமான காலம்? முழு ராசிபலன் இதோ

Guru Asthamanam: குரு பகவான் ஜூன் 10 ஆம் தேதி அஸ்தமனமானார். இதனால் அனைத்து ராசிகளிலும் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்? முழு ராசிபலனை இங்கே காணலாம்.

Guru Peyarchi Palangal: குரு பகவான் அதிர்ஷ்டம், செழிப்பு, அறிவு, குழந்தைச் செல்வம், கல்வி அகியவற்றின் காரணி கிரகமாக உள்ளார். குரு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு சுமார் 1 வருட காலம் கழித்து பெயர்ச்சி அடைகிறார். ஜூன் 10 ஆம் தேதி குரு பகவான் மிதுன ராசியில் அஸ்தமனமானார். மேஷம் முதம் மீனம் வரை குரு அஸ்தமனத்தால் ஏற்படவுள்ள மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

 

1 /13

மேஷம்:  2025 ஆம் ஆண்டில், சமீபத்தில் மே மாதம் நடந்த குரு பெயர்ச்சி மற்றும் ஜூன் 10 நடந்த குரு அஸ்தமனம் காரணமாக, மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வயப்புள்ளது. குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். குரு அருளால் மேஷ ராசிக்காரர்களுக்கு அனைத்து துறைகளிலும் முன்னேற வாய்ப்பபு கிடைக்கும்.

2 /13

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு வீட்டுச் செலவுகள் அதிகரிக்கலாம், எனவே தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். உங்கள் உடல்நலத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இந்த நேரத்தில் கடன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.

3 /13

மிதுனம்: குரு பெயர்ச்சிக்கு பிறகு நடக்கும் குரு அஸ்தமனம் மிதுன ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களை அளிக்கும். சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். ஆனால், புதிய நட்புகளில் கவனம் தேவை.

4 /13

கடகம்: குரு அஸ்தமனம் கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். தொழில் வாழ்க்கையிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.

5 /13

சிம்மம்: திடீர் பிரச்சினைகள் குறைந்து தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகளின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உறவுகள் பலப்படும். குரு அஸ்தமனம் எதிர்பாராத சுப விளைவுகளை ஏற்படுத்தும்.

6 /13

கன்னி: வாழ்க்கைத் துணையுடனான உங்கள் உறவு நன்றாக இருக்கும். குரு பகவானின் அருளால் நல்ல செய்திகளை பெறுவீர்கள். நீண்ட நாட்களாக இருந்துவரும் தகராறுகள் முடிவுக்கு வரும். குரு பெயர்ச்சி காலத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும்.

7 /13

துலாம்: ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். அதிக தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள். குரு அஸ்தமன காலத்தில் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. செலவுகளை குறைத்தால் சிக்கல்களை தவிர்க்கலாம்.

8 /13

விருச்சிகம்: போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் சில பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம். ஆனால் ஆசிரியர்களிடமிருந்தும் ஆதரவைப் பெறுவார்கள். குடும்ப உறுப்பினருடனான உங்கள் உறவில் ஏற்ற இறக்கம் இருக்கும். அமைதியாக இருப்பது நன்மை தரும்.

9 /13

தனுசு: குரு பெயர்ச்சிக்கு பின் நிகழும் இந்த அஸ்தமனம் காரணமாக தனுசு ராசிக்காரர்களின் நிதி நிலை நன்றாக இருக்கும். புதிய வழிகளில் வருமானம் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகள் தொடர்பான விஷயங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கும். உடல் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

10 /13

மகரம்: குரு அஸ்தமனத்தின் தாக்கத்தால் மகர ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டில் பல சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். லாபம் அதிகரிக்கும்.

11 /13

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு குரு அஸ்தமனத்தின் தாக்கத்தால் பெரிய இழப்பு ஏற்படலாம். இந்த காலகட்டத்தில், குடும்ப உறுப்பினரின் வேலை காரணமாக நீங்கள் சுற்றித் திரிய வேண்டியிருக்கும். இந்த நேரத்தில் உங்கள் பேச்சில் கவனம் செலுத்துவது நல்லது. இல்லையெனில் நீங்கள் சர்ச்சையில் சிக்கிக் கொள்ள நேரிடலாம்.

12 /13

மீனம்: குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் பணி இடத்தில் பாராட்டு கிடைக்கும். மூத்த அதிகாரிகளுடனான உறவுகள் சிறப்பாக இருக்கும். இருப்பினும், இந்த நேரத்தில்,  முதலீடுகளைத் தவிர்த்து, குடும்ப உறுப்பினர்களை கவனித்துக் கொள்வது நல்லது.

13 /13

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.