பின்புறம் பெரிதாக தொங்கும் சதை..குறைக்கும் 7 நிமிட உடற்பயிற்சிகள்!

Big Butt Reduction Home Workouts : பலருக்கு பின்புறத்தில் அதிகளவில் சதை இருக்கும். அவற்றை சில வீட்டு உடற்பயிற்சிகள் மூலம் குறைக்கலாம். அப்படி செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் என்னென்ன தெரியுமா?

Big Butt Reduction Home Workouts : உடல் எடை அதிகமாக இல்லாதவர்கள் கூட சந்திக்கும் ஒரு பிரச்சனை, பின்பக்கம் சதை அதிகமாக இருப்பது. இதை தவிர்க்க சில வீட்டு உடற்பயிற்சிகள் இருக்கின்றன. இந்த 7 நிமிட உடற்பயிற்சிகள், பின்பக்கத்தில் தொங்கும் சதையை குறைக்க உதவும் என்று கூறப்படுகிறது. அதற்கு உதவும் வீட்டு உடற்பயிற்சிகள் என்ன தெரியுமா?

1 /7

பின்புறத்தை குறைக்கும் இந்த உடற்பயிற்சியை செய்ய முதலில் முதுகில் தரையில் படுத்து இடுப்பை உயர்த்த வேண்டும். உங்கள் பின்புறத்தை ஸ்குவீஸ் செய்து, பின்னர் மெதுவாக கீழே இரக்க வேண்டும். இதனால், உங்கள் பின்புறத்தில் சதை குறைவதோடு, முதுகும் வலிமையாகிறது.

2 /7

கைகள் மற்றும் கால்களால் நின்று, ஒரு காலால் மேலே தூக்கி உதைக்கவும். 30 வினாடிகளுக்கு பின்பு இன்னொரு காலில் இதே போல செய்ய வேண்டும். 

3 /7

நேராக நின்று, ஒரு காலை மெதுவாக பின்னால் உதைத்து, பின் பகுதியை அழுத்துங்கள். 30 வினாடிகளுக்கு பின் பக்கங்களை மாற்றி இன்னொரு காலால் இதனை செய்யவும்.

4 /7

நாற்காலியில் சாய்ந்து உட்கார்வது போல, சுவற்றில் சாய்ந்து அப்படியே அமர வேண்டும். இந்த அந்த நிலையைப் 1 நிமிடத்திற்கு பிடித்துக் கொள்ளுங்கள்.

5 /7

ஸ்டெப் அப் அல்லது படிக்கட்டுகளில் ஒவ்வொரு காலாக ஏறி இறங்கவும். இப்படி விடாமல் 1 நிமிடத்திற்கு செய்ய வேண்டும்.

6 /7

நிமிர்ந்து நின்று, கைகளை இடுப்பில் அல்லது சுவரில் ஆதரவாக வைக்கவும். ஒரு காலை நேராக மெதுவாக பக்கவாட்டில் தூக்குங்கள். பின்பு அப்படியே பின்புறத்தை கீழே இறக்குங்கள். கால்களை மாற்றி மீண்டும் அதே போல செய்யலாம்.  ஒரு காலுக்கு 30 வினாடிகள் செய்யுங்கள்.

7 /7

உங்கள் பக்கவாட்டில் படுத்து, முழங்கால்களை வளைத்து, கால்களை ஒன்றன் மேல் ஒன்றாக வைக்கவும். கால்களை ஒன்றாக வைத்து, மேல் முழங்காலை இடுப்பை நகர்த்தாமல் முடிந்தவரை உயரமாக உயர்த்தவும். பின்பு அந்த உயரத்தை மெதுவாகக் குறைக்கவும். இரண்டு பக்கங்களும் தலா 30 வினாடிகள் செய்யவும். (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)