பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இத செஞ்சா போதும்.. உங்க வங்கி கணக்கில் ₹2500 செலுத்தப்படும்

Mahila Samriddhi Yojana Latest News: பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு ஊக்கத்தொகையாக மாதந்தோறும் ரூ.2,500 வழங்கும் மகிளா சம்ரிதி யோஜனா திட்டம் குறித்து முக்கியத் தகவல். 

Important Aannouncement For Delhi Women: மகளிர் தினத்திற்கு முன்பாக டெல்லி அரசு ரூபாய் 2500 வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யும் எனத் தகவல். அதற்கான தகுதி மற்றும் தேவையான ஆவணங்கள் என்ன? தெரிந்துக்கொள்ளுங்கள்.

1 /8

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு நிதி ரீதியாக அதிகாரம் அளிக்கும் வகையில், டெல்லி பாஜக அரசு ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. 

2 /8

மகிளா சம்ரிதி யோஜனா (Mahila Samriddhi Yojana) திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் மாதம் ரூ.2,500 வழங்கப்படும். இந்தத் திட்டம் பெண்கள் சுதந்திரமாக செயல்படவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் நோக்கமாகக் கொண்டுள்ளது. வாருங்கள் மாதம் மாதம் ரூ.2,500 எவ்வாறு பெறலாம் என்பது குறித்த அனைத்து விவரங்களையும் பார்ப்போம்.

3 /8

மகிளா சம்ரிதி யோஜனா சமூகத்தின் பொருளாதார ரீதியாக பலவீனமாக இருக்கும் பெண்களுக்காக வடிவமைக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாகவும், டெல்லியில் வசிப்பாராகவும் இருக்க வேண்டும். இந்த உதவி திட்டத்தின் பலனை பெற பின்வரும் தகுதி இருக்க வேண்டும். 

4 /8

வயது: குறைந்தபட்சம் 18 வயதுடையவராகவும் இருக்க வேண்டும். ஆண்டு வருமான: பெண்ணின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.3 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.. யார் சேரலாம்: இந்தத் திட்டத்தில் விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

5 /8

இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க பெண்கள் பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்: ஆதார் அட்டை: அடையாளச் சான்று மற்றும் குடியுரிமைச் சான்று.. குடியிருப்புச் சான்று: டெல்லியில் வசிப்பதை உறுதி செய்ய ஆவணம் அவசியம்.. வங்கி கணக்கு: மாதாந்திர உதவித்தொகை பெற வங்கி கணக்கு விவரங்கள் தேவை..  வருமானச் சான்றிதழ்: குடும்ப வருமானம் ரூ.3 லட்சத்திற்குக் குறைவாக இருப்பதை உறுதிப்படுத்த தேவை.. திருமண சான்றிதழ்: விண்ணப்பதாரர் தனிமையில் இருக்கிறாரா அல்லது விதவையா? என்பதைச் சரிபார்க்க அவசியம்

6 /8

இந்த மகிளா சம்ரிதி யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எளிது. பின்வரும் வழிகளை பின்பற்றி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

7 /8

மகிளா சம்ரிதி யோஜனாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்: www.msydelhi.gov.in... "அங்கு இருக்கும் விண்ணப்பிக்கவும்" என்பதைக் கிளிக் செய்யவும்... தேவையான விவரங்களை நிரப்பி தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்...உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதும், மாதத்திற்கு ரூ.2,500 பெறத் தகுதி பெறுவீர்கள்.

8 /8

மகிளா சம்ரிதி யோஜனா திட்டத்திற்கு இப்போதே விண்ணப்பிக்கவும். டெல்லியில் உள்ள பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும், அவர்கள் நிதிரீதியாக சுதந்திரம் பெறுவதற்கும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க திட்டமாகும். எனவே இந்த வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்.