Sani Peyarchi Palangal: குரு பகவானும், சனி பகவானும் முக்கிய பெயர்ச்சிகளை மேற்கொள்ளவுள்ளனர், இதனால் சில ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Guru Peyarchi Palangal: நவம்பர் மாதம் சனி பகவான் மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இந்த மாதத்தில் குரு பகவான் வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். இந்த இரு பெரிய கிரகங்களின் முக்கிய மாற்றங்களால் அதிக நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசி, நட்சத்திரம் மற்றும் பிற நிலைகளை மாற்றுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.
சனி பெயர்ச்சி: நீதியின் கடவுளான சனி பகவான் மார்ச் மாதம் 29 ஆம் தேதி மீன ராசியில் பெயர்ச்சி ஆனார். அனைத்து கிரகங்களிலும் அவர் மிக மெதுவாக நகரும் கிரகமாகவும், ராசிகளில் அதிக காலம் இருப்பவராகவும் உள்ளார். சனி பெயர்ச்சி மிக முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
செல்வம், திருமண வாழ்க்கை, குழந்தைகள், கல்வி, செல்வம் ஆகியவற்றின் காரணி கிரகமாகவும், சுப கிரகமாகவும் உள்ள குரு பகவான் இந்த ஆண்டு மே மாதம் பெயர்ச்சி ஆனார். குரு பெயர்ச்சியும் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு குரு வக்ர பெயர்ச்சியும் சனி வக்ர நிவர்த்தியும் நன்மை பயக்கும். இந்த நேரத்தில் அவ்வப்போது திடீர் பண லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சமூக மரியாதை அதிகரிக்கும். தொழிலதிபர்கள் நல்ல பண லாபத்தைப் பெறலாம்.
துலாம்: சனி வக்ர நிவர்த்தியும் குரு வக்ர பெயர்ச்சியும் துலாம் ராசிக்காரர்களுக்கு அனுகூலமான நன்மைகளை அளிக்கும். இந்த காலத்தில் வேலை மற்றும் தொழிலில் வெற்றி கிடைக்கும். மேலும், நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறலாம். வணிகர்கள் சில பழைய முதலீட்டால் பயனடைவார்கள். தொழிலதிபர்கள் எதிரிகளிடமிருந்து விடுதலை பெறுவார்கள், வணிகம் விரிவடையும். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் ஒருங்கிணைப்பு நன்றாக இருக்கும். மாணவர்களின் மனதில் நிச்சயமற்ற தன்மை குறித்த பயம் நீங்கும். சமூக கவுரவம் அதிகரிக்கும்.
கும்பம்: சனி வக்ர நிவர்த்தியும் குரு வக்ர பெயர்ச்சியும் கும்ப ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும். தொழிலதிபர்கள் நிதி ஆதாயத்தை பெறுவார்கள். புதிய கூட்டாளிகள் தொழிலில் இணைவார்கள், இது மிகவும் நன்மை பயக்கும். இது தவிர, குடும்ப உறுப்பினர்களுக்கிடையேயான இடைவெளி குறையும். அதே நேரத்தில், வேலையில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். மேலும், நீதிமன்ற வழக்குகளிலும் வெற்றி கிடைக்கும்.
சனி பகவானின் அருள் பெற, ‘ஓம் காகத்வஜாய வித்மஹே, கட்க அஸ்தாய தீமஹி, தன்னோ மந்த ப்ரசோதயாத்’ என்ற சனி காயத்ரி மந்திரத்தை தினமும் பாராயணம் செய்வது நல்லது.
குரு பகவானின் அருள் பெற்று, வாழ்வில் பல வித செல்வங்களை பெற்று, குடும்பம், குழந்தைகளுடம் மகிழ்ச்சியாக வாழ, தினமும், ‘ஓம் விருஷபத் வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி தந்நோ குருஹ் ப்ரசோதயாத்’ என்ற குரு காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்யலாம்.
சனி பெயர்ச்சியின் காரணமாக ஏழரை சனி பாதிப்பில் உள்ளவர்கள், 'நீலாஞ்ஜன ஸமாபாஸம், ரவிபுத்ரம் யமாக்ரஜம்; ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம், தம் நமாமி சனைச்சரம்' என்ற ஸ்லோகத்தை தினமும் சொல்லலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.