தட்கல் டிக்கெட் புக்கிங்: எளிதாக முன்பதிவு செய்வது எப்படி?

Written ByVijaya Lakshmi
Published: Apr 21, 2025, 03:20 PM IST|Updated: Apr 21, 2025, 03:20 PM IST

Tatkal Ticket Booking: கடைசி நிமிட ரயில் பயணத்தைத் திட்டமிடுகிறீர்களா? அப்படியானால் IRCTC தளத்தில் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்துக் கொள்ளலாம். ஆனால் விரைவாக எப்படி புக் செய்வது என்பதை தெரிந்துக்கொள்வோம்.

IRCTC வலைத்தளம் அல்லது பயன்பாட்டைப் பயன்படுத்தி தட்கல் டிக்கெட்டுகளை விரைவாக எவ்வாறு முன்பதிவு செய்வது? இந்த கட்டுரையில் முன்பதிவு நேரங்கள், கட்டணங்கள், பயணிகள் வரம்புகள் மற்றும் பல தகவலை நீங்கள் பெறலாம்.

Tatkal Ticket1/8

தட்கல் டிக்கெட்

கடைசி நிமிட ரயில் பயணம் மன அழுத்தத்தை ஏற்படுத்தும், ஏனெனில் டிக்கெட் பெறுவது மிகவும் கடினம். இதற்கு ஒரே வழி தட்கல் டிக்கெட் புக்கிங். ரயில் புறப்படுவதற்கு ஒரு நாள் முன்பு தட்கல் ஒதுக்கீடுகள் திறக்கப்படும்.

 

Tatkal Tickets Booking2/8

தட்கல் டிக்கெட் முன்பதிவு

2025 ஆண்டில் தட்கல் டிக்கெட் முன்பதிவு காலை 10:00 மணிக்குத் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏசி கிளாஸ் டிக்கெட்டுகள் காலை 10 மணிக்கும் ஏசி அல்லாத பிற டிக்கெடுகள் காலை 11 மணிக்கு கிடைக்கும்.

 

IRCTC3/8

ஐஆர்சிடிசி

முதலில் IRCTC அக்கவுண்டில் உள்நுழைய வேண்டும். தட்கல் படிவத்தை நிரப்புவதற்கு தேவையான அனைத்து விவரங்களையும் முன்கூட்டியே வைத்திருப்பது அவசியம்.

 

Tatkal Quota4/8

ரயில் டிக்கெட்

2 அல்லது 3 சாதனங்களில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய முயற்சித்தால் கண்டிப்பாக ஒரு டிக்கெட்டை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

 

Pick Train and Fill Passenger Details5/8

டிக்கெட் முன்பதிவு

கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுடன் ஒப்பிடும்போது இன்டர்நெட் பேங்கிங் மற்றும் UPI பரிவர்த்தனைகள் நேரத்தை மிச்சப்படுத்த உதவும். 

 

Fast Payment Within 5 Minutes6/8

பேமண்ட்

உங்கள் மொபைல் ஃபோனை அருகிலேயே வைத்திருங்கள். அப்பொழுதுதான் OTP-கள் அனுப்பப்பட்ட உடன் அவற்றை பதிவிடலாம்.

 

Tatkal Booking7/8

தட்கல் கட்டணம்

செகண்ட் கிளாஸுக்கு 10 சதவீதமும், மற்ற வகுப்புகளுக்கு 30 சதவீதமும் தட்கல் கட்டணமாக வசூலிக்கப்படும்.

 

Timings, Charges & Availability8/8

டிக்கெட்

மேற்கண்ட அனைத்து விஷயங்களையும் கருத்தில் கொண்டு தட்கல் டிக்கெட் முன் பதிவு செய்யும் போது எளிதாக நீங்களும் டிக்கெட் பெறலாம்.