தட்கல் டிக்கெட் ரூல் மாறியாச்சு.. இந்தியன் ரயில்வே புதிய அறிவிப்பு

Written ByVijaya LakshmiUpdated byVijaya Lakshmi
Published: Apr 19, 2025, 03:05 PM IST|Updated: Apr 19, 2025, 03:05 PM IST

IRCTC Tatkal Ticket Booking Timing:  சில தினங்களாக, தட்கல் டிக்கெட்டுகளின் முன்பதிவு நேரம் குறித்து சமூக ஊடகங்களில் பதிவுகள் வைரலாகி வருகின்றன. அதன் படி இதன் உண்மை என்ன என்பதை இப்போது காண்போம்.

Tatkal Ticket Booking1/7

சில தினங்களாக, தட்கல் டிக்கெட்டுகளின் முன்பதிவு நேரம் குறித்து சமூக ஊடகங்களில் பதிவுகள் வைரலாகி வருகின்றன. இதில் தட்கல் டிக்கெட்டுகளின் நேரத்தை ரயில்வே மாற்றியமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

Tatkal Booking2/7

நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து சாதனம் ரயில்வே ஆகும், இதில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இதில் டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றப்பட்டால், கோடிக்கணக்கான மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

Tatkal Ticket Booking3/7

தட்கல் டிக்கெட்டுகளின் நேரத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பரவி வரும் தகவலுக்கு தற்போது இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் லிமிடெட் பதிலளித்துள்ளது. அதன்படி இதற்கு முற்றுப்புள்ளி வைத்து ஐஆர்சிடிசி, தற்போதுள்ள தட்கல் அல்லது பிரீமியம் தட்கல் முன்பதிவு நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறியுள்ளது.

 

 

Railway4/7

ரயில் புறப்படுவதற்கு சரியாக ஒரு நாள் முன்பு தட்கல் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு தொடங்குகிறது. டிக்கெட் கவுண்டர்கள் மற்றும் ஐஆர்சிடிசி வலைத்தளத்தின் உதவியுடன் ரயிலுக்கான தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துக் கொள்ளலாம். 

 

 

Tatkal Ticket5/7

ஐஆர்சிடிசி வலைத்தளத்தின்படி, 2A, 3A, CC, EC, மற்றும் 3E போன்ற ஏசி பெட்டிகளுக்கான தட்கல் டிக்கெட் முன்பதிவு ரயில் புறப்படுவதற்கு ஒரு நாள் முன்பு காலை 10:00 மணிக்கு தொடங்கும். அதேசமயம், ஏசி அல்லாத ஸ்லீப்பர் மற்றும் இரண்டாவது இருக்கைக்கு, டிக்கெட் முன்பதிவு காலை 11:00 மணிக்கு தொடங்கும்.

 

 

IRCTC6/7

தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு ரயில்வே சில விதிகளையும் நிர்ணயித்துள்ளது. உதாரணமாக, தட்கல் டிக்கெட் உறுதி செய்யப்பட்டவுடன், நீங்கள் டிக்கெட்டை ரத்து செய்தால், பணம் ரீஃபண்ட் வழங்கப்படாது. தட்கல் டிக்கெட்டுகள் வழக்கமான டிக்கெட்டுகளை விட விலை அதிகமாக இருக்கும்.

 

 

Ticket Booking7/7

தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யும்போது கண்டிப்பாக அடையாளச் சான்றுகளை எடுத்துச் செல்ல வேண்டும்.