மூத்த குடிமக்கள், பெண்கள், ஆஷா பணியாளர்களுக்கு மாநில அரசின் பரிசு: ஓய்வூதியம், வருமானம் அதிகரிக்கும்

Pension Hike for Senior Citizens: மூத்த குடிமக்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத்தை அதிகரிக்க மாநில அரசு திட்டமிட்டு வருகிறது. பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் முக்கிய செய்தி உள்ளது. சமீபத்திய அப்டேட்டை இந்த பதிவில் காணலாம்.

Senior Citizens Latest News: உத்தரப் பிரதேசத்தில் உள்ள யோகி ஆதித்யநாத் அரசாங்கம், லட்சக்கணக்கான பயனாளிகளுக்கு, குறிப்பாக முதியவர்கள், பெண்கள், முன்கள சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சிக்ஷா மித்ராக்களுக்கு ஒரு நல்ல செய்தியை வழங்கத் தயாராகி வருகிறது. யாருக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

1 /9

உத்தர பிரதேச மக்களுக்கு நல்ல செய்தி. உத்தரப் பிரதேசத்தில் உள்ள யோகி ஆதித்யநாத் அரசாங்கம், லட்சக்கணக்கான பயனாளிகளுக்கு, குறிப்பாக முதியவர்கள், பெண்கள், முன்கள சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சிக்ஷா மித்ராக்களுக்கு ஒரு நல்ல செய்தியை வழங்கத் தயாராகி வருகிறது. இந்த அறிவிப்புகள் வரவிருக்கும் மாநில பட்ஜெட்டில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2 /9

மூத்த குடிமக்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத்தை ₹1,000-லிருந்து ₹1,500 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இது மிகப்பெரிய செய்தியாக பார்க்கப்படுகிறது. ​​உத்தரப் பிரதேசத்தில் சுமார் 67.50 லட்சம் மூத்த குடிமக்கள் முதியோர் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். இது காலாண்டு அடிப்படையில் வழங்கப்படுகிறது.

3 /9

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், நிதி அமைச்சர் சுரேஷ் கன்னா மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் (நிதி) தீபக் குமார் ஆகியோருக்கு இடையே முன்மொழியப்பட்ட உயர்வு குறித்து ஏற்கனவே விவாதங்கள் நடைபெற்றுள்ளன. இது இந்த முன்மொழிவு மிக உயர்ந்த மட்டத்தில் ஆராயப்பட்டு வருவதைக் காட்டுகிறது. ஆதரவற்ற பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இதே போன்ற உயர்வுகள் திட்டமிடப்பட்டு வருகின்றன. இந்த வகையில், சமுதாயத்தில் ஒரு விரிவான நலத்திட்ட ஏற்பாடுகள் செய்யப்ப்பட்டு வருவதை புரிந்துகொள்ள முடிகிறது.

4 /9

ஆதரவற்ற பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், தற்போது சுமார் 38.58 லட்சம் பெண்கள் மாதத்திற்கு ₹1,000 பெறுகின்றனர். இந்தத் தொகையை ₹1,500 ஆக உயர்த்த அரசாங்கம் தயாராகி வருகிறது. இதேபோல், சுமார் 11.98 லட்சம் மாற்றுத்திறனாளிகளின் மாதாந்திர ஓய்வூதியம் விரைவில் ₹1,000-லிருந்து ₹1,500 ஆக உயரக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

5 /9

2017 ஆம் ஆண்டு பதவியேற்ற உடனேயே, யோகி அரசாங்கம், கிராமப்புறங்களில் ஆரம்பக் கல்வியை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்த சிக்ஷா மித்ராக்களின் மதிப்பூதியத்தை மாதத்திற்கு ₹3,500-லிருந்து ₹10,000 ஆக உயர்த்தியது. இப்போது சுமார் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, இவர்களது நீண்டகால கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்து வருகிறது.

6 /9

ஆஷா பணியாளர்களுக்கும் மாநில அரசு நல்ல செய்தியை அளிக்கக்கூடும். உத்தரப் பிரதேசத்தில் சுமார் 1.70 லட்சம் ஆஷா பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் மாநிலத்தின் சுகாதார சேவை அமைப்பின் முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறார்கள். ஆஷா பணியாளர்களின் ஊக்கத்தொகையை அதிகரிப்பது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது. தற்போது இவர்கள் மாதத்திற்கு ₹2,500 முதல் ₹3,500 வரை ஊக்கத்தொகை பெற்று வருகிறார்கள்.

7 /9

மேலும் தொழுநோயாளிகளுக்கான மாத ஓய்வூதியமும் அதிகரிக்கப்படலாம். தற்போது மாதத்திற்கு ₹3,000 ஓய்வூதியம் பெறும் 13,395 தொழுநோயாளிகளுக்கு, இந்தத் தொகை ₹3,500 அல்லது ₹4,000 ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.

8 /9

இந்த திட்டங்களின் பயனாளிகளில் பெரும்பான்மையானோர் பெண்களே என்று அதிகாரிகள் கூறுகின்றனர். முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்களில், சுமார் 40 லட்சம் பேர் பெண்களாக உள்ளனர். மேலும், ஆதரவற்றோர் ஓய்வூதியம் மற்றும் மாற்றுத்திறனாளி ஓய்வூதியப் பிரிவுகளிலும் பெண்களே அதிகமாக உள்ளனர். 

9 /9

பொறுப்பு துறப்பு: இந்த செய்தி தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ தளங்களை அணுக பரிந்துரைக்கப்படுகின்றது.