ஓய்வூதியதாரர்களுக்கு 20%-100% கூடுதல் ஓய்வூதியம்: பென்ஷன் உயர்வு குறித்த அரசு உத்தரவு, முக்கிய அப்டேட்

Central Government Pensioners Latest News: மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி. அவர்களுக்கு இனி கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கும். கூடுதல் ஓய்வூதிய விவரங்களை இங்கே காணலாம்.

Additional Pension For Central Government Pensioners: மத்திய அரசு 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியத்தின் பலனை வழங்கும். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது. பணியாளர், பொது குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் சமீபத்திய அறிவிப்பின்படி, கருணை உதவித்தொகை என்ற பெயரில் மத்திய அரசு இந்த ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியத்தை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

1 /12

சமீப நாட்களில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் 8வது ஊதியக்குழு தொடர்பான விவாதங்கள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. புதிய ஊதியக்குழு 2026 ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் என நம்பப்படுகின்றது.

2 /12

மறுபுறம், ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் சமீபத்தில் ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளது. அரசாங்கத்தின் இந்த முடிவால் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் பெரிய வகையில் பயனடைவார்கள். இந்த புதிய விதி என்ன? இதனால் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கவுள்ள நன்மை என்ன? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

3 /12

ஓய்வூதியதாரர்களுக்கு அரசாங்கத்தின் ஒரு பெரிய செய்தி கிடைத்துள்ளது. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்காக மத்திய அரசு ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. 7வது ஊதியக் குழுவின் கீழ் ஓய்வூதிய விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

4 /12

இப்போது 80 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் கூடுதல் ஓய்வூதியத்தின் பலனைப் பெறுவார்கள். இந்த முடிவை ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை (DoPPW) எடுத்துள்ளது. இந்த மாற்றம் CCS விதிகள், 2021 இன் விதி 44 இன் துணை விதி 6 இன் தேவைகளுக்கு இணங்க செய்யப்பட்டுள்ளது.

5 /12

புதிய முடிவின் கீழ், 80 வயதுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு கருணை உதவித்தொகை வடிவில் கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படும். மத்திய அரசின் இந்த முடிவு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது.

6 /12

வயது வாரியாக யாருக்கு எவ்வளவு கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கும்? எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓய்வூதிய அதிகரிக்கப்படும்? இந்த கணக்கீட்டை இங்கே காணலாம்.

7 /12

80 முதல் 85 வயது வரையிலான மத்திய அரசு ஓயூதியதாரர்களுக்கு அவர்களது அடிப்படை ஓய்வூதியத்தில் 20 சதவீதம் கூடுதல் தொகை கூடுதல் ஓய்வூதியமாக வழங்கப்படும். 85 வயது முதல் 90 வயது வரையிலான ஓய்வூதியதாரர்கள் 30 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் பெறுவார்கள்.

8 /12

90 முதல் 95 வயதுக்கு இடைப்பட்ட மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு, கூடுதல் ஓய்வூதியம், அதாவது கருணைத் தொகையாக மாதம் 40 சதவிகிதம் அதிக ஓய்வூதியம் வழங்கப்படும். 95 முதல் 100 வயதுடைய ஓய்வூதியதாரர்களுக்கு 50 சதவீத கூடுதல் ஓய்வூதியமும் வழங்கப்படும்.

9 /12

100 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு அடிப்படை ஓய்வூதியத்தில் 100 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படும். ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை சமீபத்தில் இந்த தகவலை வெளியிட்டது.  

10 /12

ஓய்வு பெற்றவர்கள்  மேலே குறிப்பிட்ட வயது வரம்பை அடைந்தவுடன், மாதத்தின் முதல் நாளிலேயே ஓய்வூதியத்தைப் பெறத் தொடங்குவார்கள். இந்த கூடுதல் ஓய்வூதியம், வயது மூப்பின் காரணமாக அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவைக் கையாள அவர்களுக்கு உதவும்.

11 /12

கூடுதல் ஓய்வூதியம் தொடங்கும் வயது வரம்பை 65 ஆக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்த நிலையில், சமீபத்தில் மாநிலங்களவையில் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. எனினும், அப்படி எந்த திட்டமும் தற்போது இல்லை என்று அரசு தரப்பிலிருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது.

12 /12

பொறுப்பு துறப்பு: இந்த செய்தி தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ தளங்களை பார்வையிட பரிந்துரைக்கப்படுகின்றது.