சனி நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் தலைவிதி மாறும், செல்வமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்

Published: Apr 19, 2025, 04:05 PM IST|Updated: Apr 19, 2025, 07:05 PM IST

Sani Nakshatra Peyarchi Palangal: ஏப்ரல் 28 ஆம் தேதி சனி நட்சத்திர பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதனால் அதிக நன்மைகளை அடையப்போகும் ராசிகள் எவை? யாருக்கு அதிக லாபம்? சனி நட்சத்திர பெயர்ச்சி ராசிபலனை இந்த பதிவில் காணலாம்.

Sani Peyarchi Palangal: அனைத்து கிரகங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட குணாதிசயம் உள்ளது. ஒரு நபரின் வாழ்க்கையில் பொறுமை, ஒழுக்கம் மற்றும் செயல்களின் பலன்களை சோதிக்கும் ஒரே கிரகம் சனி மட்டுமே. ஒருவர் இந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால், அவரது வாழ்க்கையில் மகிழ்ச்சி குறையாமல் இருப்பதை யாராலும் தடுக்க முடியாது. மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பதால் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார்.

Sani Peyarchi1/10

சனி பெயர்ச்சி

சனி பகவான் மார்ச் மாதம் 29 ஆம் தேதி மீன ராசியில் பெயர்ச்சி ஆனார். சனி பெயர்ச்சி இந்த ஆண்டின் மிக முக்கிய ஜோதிட நிகழ்வாகும்.

Sani Nakshatra Peyarchi2/10

சனி நட்சத்திர பெயர்ச்சி

ஏப்ரல் 28 ஆம் தேதி காலை 7:52 மணிக்கு, சனி பகவான்  தனது சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இது ஒரு முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

Sani Peyarchi Palangal3/10

சனி பெயர்ச்சி பலன்கள்

சனி நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிக நன்மைகள் நடக்கும். இவர்களுக்கு இது ஒரு பொற்காலமாய் திகழும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Taurus4/10

ரிஷபம்

ரிஷபம்: சனி நட்சத்திர பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்லதாக இருக்கும். இந்த காலத்தில் இவர்களது தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழுமையான ஆதரவு கிடைக்கும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு பல மடங்கு லாபம் கிடைக்கும்.

Capricorn5/10

மகரம்

மகரம்: சனி பெயர்ச்சி மகர ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல பலன்களைக் கொண்டுவரும். திருமண வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். இதுவரை நிலுவையில் உள்ள அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக முடிக்கப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். தொழிலில் வளர்ச்சி ஏற்படும். நிதி நிலைமை வலுவாக இருக்கும்.

Aquarius6/10

கும்பம்

கும்பம்: சனி நட்சத்திர பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். தடைபட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும். மன அமைதி கிடைக்கும். பண வரவு அதிகமாகும். நல்ல செய்திகள் கிடைக்கும். வியாபாரம் விருத்தி அடையும். பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்களால் அனுகூலமான நன்மைகள் ஏற்படும்.

Shani Gochar 20257/10

சனி பகவானின் அருள் பெற

சனி பகவானின் அருள் பெற ‘ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத்’ என்ற சனி காயத்ரி மந்திரத்தை தினமும் கூறலாம், இது தவிர, கோளறு பதிகம், சனி சாலிசா, அனுமான் சாலிசா ஆகிய ஸ்லோகங்களையும் பாராயணம் செய்யலாம்.

Ezharai Sani8/10

ஏழரை சனி

ஏழரை சனி பாதிப்பு அனைவரையும் அச்சப்படுத்தும் ஒரு கட்டமாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் திருநள்ளாறு கோயிலுக்கு சென்று சனி பகவானை வழிபடலாம். இங்குள்ள தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள சனீஸ்வர பகவானை வணங்கினால் ஏழரை சனி, கண்ட சனி, அஷ்டமத்து சனி போன்ற சனி பகவானால் ஏற்படும் பாதிப்புகள் குறையும் என்பது ஐதீகம்.

Shani Gochar9/10

சனி பகவான்

ஏழை எளியவர்களுக்கும், நலிந்தவர்களுக்கும் தான தர்மம் செய்யும் நல்ல உள்ளம் கொண்டவர்களை சனி பகவான் எந்த நாளிலும் அதிகம் சோதிப்பதில்லை.

Disclaimer10/10

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.