ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் போனின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தற்போதைய விலை குறித்து தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய ஃபிளாக்ஷிப் மாடலான ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன், இதுவரை இல்லாத அளவிலான மிக குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.
இதன் அதிகாரப்பூர்வ அறிமுக விலை ரூ. 1,49,900 ஆகும்; ஆனால் தற்போது இந்த போனுக்கு ரூ. 4,000 நேரடி தள்ளுபடி வழங்கப்பட்டு, ரூ. 1,45,490 என்ற விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது.
ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ், ஒன்கார்டு மற்றும் ஹெச்எஸ்பிசி ஆகிய வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி கொள்முதல் செய்தால் கூடுதலாக ரூ. 6,000 வரை தள்ளுபடி பெறலாம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மொத்தமாக ரூ. 10,000 வரை சேமிக்க முடியும்.
மேற்கண்ட சலுகைகள் மட்டுமின்றி, வாடிக்கையாளர்கள் தங்களது பழைய ஸ்மார்ட்போன்களை எக்ஸ்சேஞ்ச் செய்வதன் மூலமும் கூடுதல் தள்ளுபடியை பெற்று இந்த போனின் விலையை மேலும் கணிசமாக குறைத்துக் கொள்ளலாம்.
இந்த போன் 6.9-இன்ச் அளவிலான OLED திரை மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட்-ஐக் கொண்டுள்ளது; மேலும், இதில் இடம்பெற்றுள்ள வலிமையான ஏ19 ப்ரோ சிப்செட் மூலம் ஹெவி கேம்களை கூட எவ்வித தடையுமின்றி மிக சிறப்பாக விளையாட முடியும்.
பின்பக்கத்தில் மூன்று 48-மெகாபிக்சல் சென்சார்களை கொண்டுள்ள இது மிகச்சிறந்த வீடியோ ரெக்கார்டிங் வசதியை வழங்குகிறது; மேலும் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் ஒரு நாளுக்கு மேலாக உழைக்கக்கூடிய சிறப்பான பேட்டரி பேக்கப்பையும் தருகிறது.