ஊழியர்களுக்கு அதிர்ச்சி: இனி பென்ஷன், கிராஜுவிட்டி கிடைக்காது! விதிகளில் அரசு செய்த மாற்றம்

Published: Apr 21, 2025, 02:27 PM IST|Updated: Apr 21, 2025, 02:27 PM IST

Central Government Employees Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி. குறிப்பிட்ட சில ஊழியர்களுக்கு இனி ஓய்வூதியம், பென்ஷன் கிடைக்காது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Central Government pensioners Latest News: இப்போது ஒரு ஊழியர் பணியின் போது அலட்சியம் காட்டினாலோ, ஒழுக்கமில்லாமல் நடந்துகொண்டாலோ அல்லது ஏதேனும் கடுமையான குற்றத்திற்காக குற்றவாளி எனக் கண்டறியப்பட்டாலோ, அவரது ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை பகுதியளவு அல்லது முழுமையாக நிறுத்தப்படலாம். இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Central Government Employees1/11

மத்திய அரசு ஊழியர்கள்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. இது அனைவரும் கண்டிப்பாக நினைவில் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான தகவலாகும். இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

7th Pay Commission2/11

7வது ஊதியக்குழு

மத்திய அரசு 7வது ஊதியக் குழுவின் கீழ் ஒரு புதிய விதியை அமல்படுத்தியுள்ளது. அரசு ஊழியர்கள் சில விதிகளை பின்பற்றாவிட்டால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஒய்வூதியதாரர்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் வரக்கூடும். இதை பற்றிய முழு விவரத்தை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

 

Pension3/11

ஓய்வூதியம்

இப்போது ஒரு ஊழியர் பணியின் போது அலட்சியம் காட்டினாலோ, ஒழுக்கமில்லாமல் நடந்துகொண்டாலோ அல்லது ஏதேனும் கடுமையான குற்றத்திற்காக குற்றவாளி எனக் கண்டறியப்பட்டாலோ, அவரது ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை பகுதியளவு அல்லது முழுமையாக நிறுத்தப்படலாம்.

Central Government Pensioners4/11

மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள்

அரசாங்க அமைப்பில் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட CCS (ஓய்வூதியம்) விதிகள் 2021 இல் உள்ள திருத்தத்தின் கீழ் இந்த மாற்றம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய விதியின் அனைத்து அம்சங்களையும் எளிய முறையில் புரிந்துகொள்ளலாம்.

 

Pension5/11

பணிக்கொடை

7வது ஊதியக் குழுவின் கீழ் பெறப்படும் நிதிச் சலுகைகள் முழு நேர்மையுடன் தங்கள் பொறுப்புகளைச் செய்யும் ஊழியர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. ஒரு ஊழியர் பணியின் போது கடுமையான அலட்சியம் அல்லது ஒழுக்கமின்மையை காட்டினால், அது ஓய்வுக்குப் பிறகு அவரது ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை நேரடியாகப் பாதிக்கக்கூடும்.

Pensioners6/11

ஓய்வூதியதாரர்கள்

இந்த விதி தற்போதைய ஊழியர்களுக்கு மட்டுமல்ல, ஓய்யூதியதாரர்களுக்கும் பொருந்தும். ஒரு உழியர் ஓய்வு பெற்ற பிறகு, அவர் பணியில் இருந்தபோது செய்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், ஏற்கனவே அவருக்கு செலுத்தப்பட்ட தொகையை அரசாங்கம் மீண்டும் பெற முடியும். இந்த மாற்றத்தின் மூலம், அரசு ஊழியர்கள் பணிக்காலத்தின் போது ஒழுக்கத்தை கடைபிடிப்பதை ஊக்குவிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

Disclaimer7/11

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கப்படுகின்றது.

State Government Employees8/11

மாநில அரசு ஊழியர்கள்

இந்த புதிய விதி 7வது ஊதியக் குழுவின் கீழ் வரும் அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும். எதிர்காலத்தில், மாநில அரசுகளும் இதை மத்திய அரசு ஊழியர்களுக்கு கொண்டு வரக்கூடும் என கூறப்படுகின்றது. குறிப்பாக, துறை ரீதியான விசாரணை, நீதிமன்ற வழக்கு அல்லது பணியின் போது கடுமையான குற்றங்களில் ஈடுபட்டால், அவர்களின் ஓய்வூதிய தொகை மற்றும் பணிக்கொடைக்கு ஆபத்து வரக்கூடும்.இந்த நடவடிக்கை ஊழியர்களுக்கு அவர்களின் பொறுப்புகள் குறித்து மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்று அரசாங்கம் நம்புகிறது.

Pension and Gratuity9/11

ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை

புதிய விதிகளின் கீழ், ஓய்வூதியம் அல்லது பணிக்கொடையை நிறுத்துவது குறித்து முடிவெடுக்கும் உரிமை சில தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. பணியாளர் பணிபுரிந்த அமைச்சகம் அல்லது துறையின் செயலாளர், பணியாளர் நியமன செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள தலைவர் ஆகியோர் இதில் அடங்குவர். ஊழியர் தணிக்கை மற்றும் கணக்குத் துறையைச் சேர்ந்தவர் என்றால், அந்த முடிவை CAG (கணக்கு மற்றும் தணிக்கைத் தலைவர்) எடுப்பார்.

Central Government Employees10/11

மத்திய அரசு ஊழியர்கள்

இருப்பினும், எந்தவொரு இறுதி முடிவையும் எடுப்பதற்கு முன் UPSC (யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்) இன் ஆலோசனையைப் பெறுவது கட்டாயமாகும். இந்த செயல்முறை வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயத்தை உறுதி செய்கிறது.

Pension11/11

பென்ஷன்

ஒரு ஊழியர் மீது துறை ரீதியான விசாரணை தொடங்கப்பட்டாலோ அல்லது அவர் ஏதேனும் நீதிமன்ற வழக்கில் ஈடுபட்டிருந்தாலோ, அது குறித்த தகவல் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு வழங்கப்படும். இதற்குப் பிறகு, யுபிஎஸ்சியிடமிருந்து ஆலோசனை பெறப்படும், பின்னர் ஓய்வூதியம் அல்லது பணிக்கொடையை நிறுத்துவதற்கான இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும். ஊழியர் ஏற்கனவே ஓய்வூதியம் அல்லது பணிக்கொடை பெற்றிருந்தால், பின்னர் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவரிடமிருந்து பகுதியளவு அல்லது முழுத் தொகையையும் அரசு மீண்டும் பெறலாம்.