Central Government Employees Latest News: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. அரசாங்கம் சில விதிகளை கடுமையாக்கியுள்ளது. இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Central Government pensioners Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கு சில சந்தர்ப்பங்களில் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை கிடைக்காமல் போகலாம் என அரசாங்கத்தின் சமீபத்திய விதி ஒன்று தெரிவிக்கின்றது. பணிகளை ஒழுங்காக மேற்கொள்ளாத பணியாளர்களுக்கு இவை நிறுத்தப்படலாம். இதை பற்றி இந்த பதிவில் முழும்ழியாக தெரிந்துகொள்ளலாம்
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக் குழுவின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை தொடர்பாக சமீபத்தில் சில புதிய அறிவிப்புகள் வெளிவந்தன. எனினும் இவை ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளன.
மத்திய அரசு ஊழியர்கள் மற்று மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் தங்களுக்கான கடமைகளை சரிவர செய்யாமல், விதிகளைப் புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால், மிகப்பெரிய இழப்புகளை சந்திக்க நேரிடும்.
ஒரு ஊழியர் தனது பணிக்காலத்தில் பெரிய வகையில் வேலையில் அலட்சியமாக நடந்துகொண்டாலோ அல்லது ஏதாவது குற்றத்தில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டாலோ, ஓய்வு பெற்ற பிறகு அவரது ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை நிறுத்தப்படும் என்று எச்சரித்து, அரசாங்கம் நவம்பர் 2022 இல் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
மத்திய சிவில் சர்வீசஸ் ஓய்வூதிய விதிகள் 2021 இல் செய்யப்பட்ட 8 மாற்றங்களின் கீழ், மத்திய அரசு ஊழியர்கள், பணியிடத்தில் ஏதேனும் கடுமையான தவறு செய்தால், சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் நியமன அதிகாரிகளுக்கு ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை நிறுத்த உரிமை உண்டு.
பணியின் போது அலட்சியம் காட்டுவது பணி ஓய்வுக்குப் பிறகு நிதி உதவியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், விதிகளைப் பின்பற்றுவதில் ஊழியர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்த உத்தரவு எச்சரிக்கிறது.
நியமனங்களைக் கையாளும் அதிகாரிகள் - அமைச்சகச் செயலாளர், தலைவர் மற்றும் தணிக்கை மற்றும் கணக்குத் துறை போன்றவர்களுக்கு, ஒருவர் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டால் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை நிறுத்தி வைப்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணிகளிலிருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள், பணி ஓய்வு பெற்ற பிறகு, விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளி எனக் கண்டறியப்பட்டால், அவருக்கு வழங்கப்பட்ட தொகை திரும்பப் பெறப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது
7வது ஊதியக் குழுவின் கீழ், இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், ஒரு ஊழியரின் ஓய்வூதியம் அல்லது கிராஜுவிட்டி நிறுத்தப்பட்டாலோ அல்லது குறைக்கப்பட்டாலோ, UPSC-யிடமிருந்து பரிந்துரைகள் பெறப்பட வேண்டும். அந்த ஊழியருக்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட விதி 44ன் படி மாதம் ரூ.9000 குறைந்தபட்ச நிலையான தொகை வழங்கப்படும்.
இந்த விதி மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பொருந்தும். இதே போன்ற விதிகளை மாநில அரசுகளும் வரும் காலங்களில் அமல்படுத்தலாம் என கூறப்படுகின்றது.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இந்த விதிகளை பற்றி முழுமையாக அறிந்திருக்க வேண்டியது மிக அவசியமாகும். இந்த அறிவிப்பின் முக்கிய நோக்கம், அரசு ஊழியர்களிடையே விதிகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதாகும். இதன் மூலம் அவர்கள் பணியில் முழு கவனம் செலுத்தி, ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையில் எந்த வித சிக்கலும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.