பிக்பாஸ் 9 : முதல் ஃபைனலிஸ்ட் அரோரா யார் தெரியுமா? இவர் குறித்து யாருக்கும் தெரியாத தகவல்..

Aurora Sinclair Unknown Facts : பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் முதல் ஃபைனலிஸ்ட் ஆக நுழைந்தவர், அரோரா சின்க்லேர். இவர் குறித்த சில அறியாத தகவல்களை நாம் இங்கே பார்ப்போம்.

Aurora Sinclair Unknown Facts : பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராகவும், இறுதிப்போட்டிக்குள் முதலாவதாக நுழைந்தவராக இருப்பவர், அரோரா. இவருக்கு, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நிறைய ஆதரவு கிடைத்திருக்கின்றது. இவர் குறித்த சில தகவல்களை நாம் இங்கே தெரிந்து கொள்வோம்.

1 /7

பிக்பாஸ் 9 நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருப்பவர் அரோரா. இவரது முழு பெயர், அரோரா சின்க்லேர்.

2 /7

இவர், கடந்த சீசனில் முக்கிய போட்டியாளராக இருந்த ரியாவின் தோழி இவர். இந்த சீசனில், இவர் நுழையும் போது இறுதிப்போட்டியில் நுழைவார் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

3 /7

அரோரா, பிக்பாஸிற்கு வருவதற்கு முன்பு அவருக்கு பாலியல் மயமாக்கப்பட்ட ஒரு பெயர் இருந்தது. ஆனால், அந்த பெயர் பிக்பாஸிற்கு வந்த பிறகு மறைந்து விட்டது.  

4 /7

அரோரா, இன்ஸ்டாவில் சப்ஸ்க்ரைபர்ஸ் மூலமாக சம்பாதித்து வந்தார். இது, ஒரு கட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து பிக்பாஸில் இவர் நுழைந்த பின்பு, இவரை யாரெல்லாம் அவமானப்படுத்தியது போல பேசினார்களோ, அவர்களே இவரது புத்திக்கூர்மையை பார்த்து பலரும் பாராட்டி இருக்கின்றனர்.  

5 /7

டிக்கெட் டு ஃபினாலே டாஸ்கில் வென்று, முதல் இறுதி போட்டியாளராக நுழைந்த அரோரா, பாண்டிச்சேரியை பூர்விகமாக கொண்டவராம். தனது தந்தையின் பிசினஸிற்காக, சேலத்திற்கு மாறியதாகவும் இப்போது சென்னையில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பதாகவும் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

6 /7

அரோரா, தனது குடும்பத்தினர் தன்னை வீட்டை விட்டு அனுப்பி விட்டதாக பிக்பாஸில் ஒரு முறை தெரிவித்திருக்கிறார். மேலும், பிக்பாஸ் ஃபேமிலி ரவுண்டில் அவரை சந்திக்க அவரது குடும்பத்தினர் யாருமே சந்திக்க வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

7 /7

24 வயதாகும் அரோரா, இன்ஸ்டாவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகைகளுள் ஒருவராகவும் இருக்கிறார். பிக்பாஸிற்கு பின்பு இவருக்கு பெண்களின் ஆதரவு அதிகமாக ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது.