பிக்பாஸ் 9 : வைல்ட் கார்டில் எண்ட்ரி கொடுக்கும் ஸ்டார் தம்பதி! வரலாற்றில் முதல் முறையாம்..

Written ByYuvashree
Published: Oct 30, 2025, 10:24 AM IST|Updated: Oct 30, 2025, 10:24 AM IST

Bigg Boss 9 Tamil Wildcard Contestants : மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற நிகழ்ச்சியாக இருக்கிறது பிக்பாஸ். இதன் 9வது சீசன் சமீபத்தில் தொடங்கியது. இதில், வைல்ட்கார்டில் நுழைய இருக்கும் பிரபலங்கள் குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.

Bigg Boss 9 Tamil Wildcard Contestants : சின்னத்திரையில், மக்களின் அதிக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக இருக்கிறது பிக்பாஸ். இதன் 9வது சீசனை, விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். போட்டி தொடங்கி, சில வாரங்களே ஆகியிருக்கும் நிலையில், நிகழ்ச்சியை இன்னும் சூடுபடுத்த சில வைல்ட்கார்ட் போட்டியாளர்களை களத்தில் இரக்க இருக்கின்றனர். இவர்கள் யார் யார் என்பது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

Bigg Boss 91/7

பிக்பாஸ் 9

7வது சீசன் வரை, கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை இப்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். நெற்றியில் அடித்தார் போல் இவர் கேட்கும் கேள்விகள், ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

VJ Paru2/7

விஜே பாரு

இந்த சீசனில் முதல் போட்டியாளராக நந்தினி பாதியில் வீட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து அடுத்தடுத்த வாரங்களில் 3 பேர் எவிக்ட் ஆகி விட்டனர். இப்போதைக்கு, விஜே பாருதான் பிக்பாஸின் அனைத்து ப்ரோமோ கண்டெண்ட்களிலும் பெரிதாக தெரியும் முகமாக இருக்கிறார். 

Kamrudin3/7

கம்ருதின்

ஹவுஸ் மேட்ஸ் மற்றும் பார்வையாளர்களிடையே, கம்ருதின் அதிகமாக வெறுப்பை சம்பாதித்த போட்டியாளராக இருக்கிறார். இருப்பினும், அவர் எவிக்‌ஷனில் இருந்து தொடர்ந்து மக்களின் வாக்குகளால் காப்பாற்றப்பட்டு வருகிறார்.

Prajin4/7

பிரஜின்

போட்டியை கொஞ்சம் விறுவிறுப்பாக ஆக்குவதற்காக, வைல்ட் கார்ட் போட்டியாளர்களை உள்ளே நுழைக்க இருக்கின்றனர். இதில் சீரியல் மற்றும் சினிமா நடிகர் பிரஜினும், அவரது மனைவியும் உள்நுழைய இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Star Jodi5/7

நட்சத்திர தம்பதி

நடிகர் பிரஜின், சீரியல் நடிகை சாண்ட்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவரும் பிக்பாஸ் இல்லத்திற்குள் வைல்ட் கார்ட் போட்டியாளராக உள்நுழைவதாக கூறப்படுகிறது. தமிழ் பிக்பாஸ் வரலாற்றிலேயே,  நட்சத்திர தம்பதி போட்டிக்குள் நுழைவது இதுதான் முதல்முறை என்று கூறப்படுகிறது.

Divya Ganesh6/7

திய்வா கணேஷ்

அடுத்ததாக, சீரியல் நடிகை திவ்யா கணேஷும் போட்டிக்குள் நுழைவதாக கூறப்படுகிறது. இவர், பாக்கியலக்‌ஷ்மி தொடர் மூலம் பிரபலமானவர்.

Amit Bhargav7/7

அமித் பார்கவ்

‘கல்யாணம் முதல் காதல் வரை’ தொடர் மூலம் பிரபலமானவர், அமித் பார்கவ். இவரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வைல்ட்கார்ட் போட்டியாளராக நுழைய இருக்கிறார். இவர்களின் ஆட்டத்தை காண, ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.