Bigg Boss Tamil 8 Eviction: பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி 63 நாட்களை கடந்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் 6 வாரம் இருக்கும் நிலையில் சில அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.
பிக்பாஸ் சீசன் தமிழ் 8 நிகழ்ச்சி சில அதிரடி திருப்பங்களுடன் நடைபெற்று வருகிறது. ஆண்கள் vs பெண்கள் என தனி தனியாக இருந்த பிக்பாஸ் வீடு 2 வாரங்களுக்கு முன்னர் ஒன்றாக இணைக்கப்பட்டது.
தற்போது பிக்பாஸ் 8வது சீசன் தொடங்கி 63 நாட்கள் முடிந்துள்ள நிலையில், இந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத விதமாக 2 ஏவிக்ஷன் நடைபெற்றுள்ளது. இதனால் வீட்டில் இருந்த அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
கடந்த வாரம் நாமினேஷனில் முத்துக்குமரன், சௌந்தர்யா, ரானவ், ஜாக்குலின், சத்யா, ரயான், பவித்ரா ஜனனி, மஞ்சரி, ரஞ்சித், தர்ஷிகா, சச்சனா மற்றும் ஆனந்தி ஆகியோர் இருந்தனர்.
இதில் இருந்து சச்சனா மற்றும் ஆனந்தி வெளியேற்றப்பட்டுள்ளனர். அனைவரும் ரயான் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் இவர்கள் 2 பெரும் வெளியேறியது ட்விஸ்ட்டாக இருந்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய 4வது வாரத்தில் வைல்டு கார்டு போட்டியாளர்களாக உள்ளே வந்த வர்ஷினி, ரியா, சிவ குமார், ரானவ், ரயான் மற்றும் மஞ்சரி ஆகியோரில் தற்போது 3 பேர் மட்டுமே வீட்டில் உள்ளனர்.
இன்னும் 6 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் தற்போது 15 போட்டியாளர்கள் வீட்டில் உள்ளனர். இதனால் வரும் வாரங்கள் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.