பிக்பாஸ் 9 நிகழ்ச்சிக்குள் நுழைந்த பின்..உடல் எடை குறைந்த விக்ரம்!

Bigg Boss Tamil 9 Vikram Weight Loss : பரபரப்பாக நடைப்பெற்று வரும் பிக்பாஸ் 9 போட்டியில் முக்கிய போட்டியாளராக இருக்கிறார், விக்கல்ஸ் விக்ரம். இவர், போட்டிக்குள் நுழைந்த பின்பு உடல் எடை குறைந்திருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

Bigg Boss Tamil 9 Vikram Weight Loss : மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக இருக்கிறது பிக்பாஸ். இதன் 9வது சீசன் தற்போது நடைப்பெற்று வருகிறது. இதில் முக்கிய போட்டியாளராக விக்கல்ஸ் விக்ரம் இருக்கிறார். இவர், தற்போது உடல் எடை குறைந்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1 /7

பிக்பாஸ் 9 நிகழ்ச்சி, மிக விரைவில் முடிவுற இருக்கிறது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் விக்கல்ஸ் விக்ரம் முக்கிய போட்டியாளராக இருக்கிறார்.  

2 /7

விக்ரம், ’விக்கல்ஸ்’ என்கிற பெயரில் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அதைத்தாண்டி, அவர் தனது குழுவினருடன் சேர்ந்து சில சினிமா பாடல்களை கலாய்த்து வீடியோக்களை பதிவிட்டு பிரபலம் ஆகியிருக்கிறார்.  

3 /7

விக்ரம், பிக்பாஸ் 9 நிகழ்ச்சிக்குள் நுழைந்த புதிதில் கொஞ்சம் அமைதியான ஆளாகத்தான் இருந்தார். ஆனால், பார்வதியுடன் ஒரு சண்டையில் அதிகமாக கோபப்பட்டதால் அவரது குரலும் முகமும் அடிக்கடி பிக்பாஸ் ப்ரோமோவில் காணப்படும் விஷயமாக இருந்தது.

4 /7

பார்வதி-கம்ருதீன் ரெட் கார்டிற்கு பிறகு, இப்போது ஃபைனலில் இருக்கும் டாப் 5 போட்டியாளர்களுள் ஒருவராக இருக்கிறார், விக்ரம். சமீபத்தில் முன்னாள் ஹவுஸ் மேட்ஸ்கள் மீண்டும் நிகழ்ச்சிக்குள் வந்து, இவர் செய்யும் சில விஷயங்கள் குறித்து கேள்வி கேட்டனர்.

5 /7

விக்ரம், சாஃப்ட் ஆன போட்டியாளராக கருதப்பட்டாலும், இறுதியில் பல டாஸ்குகளில் டஃப் கொடுத்து வந்தார். இதனால் இவருக்கு மக்கள் மத்தியிலும் ஆதரவு பெருகியது.  

6 /7

விக்ரமுக்கு, பிக்பாஸ் வீட்டிற்குள் சக ஹவுஸ்மேட் ஆக இருக்கும் சபரி, நண்பனாக இருக்கிறார். கடந்த சில நாட்களாக தன்னால் சண்டையிட முடியாது என்று செயலிழந்தது போல காணப்படும் விக்ரமை ஆதரித்து அவரது சமூக வலைதள பக்கங்களில் ஏதேனும் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகிறது.  

7 /7

விக்ரம், பிக்பாஸிற்கு செல்லும் முன் எப்படியிருந்தார், இப்போது எப்படியிருக்கிறார் என்பது குறித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோ வெளியாகி இருக்கிறது. அதில், பிக்பாஸிற்கு சென்று நிகழ்ந்த ஒரே ஒரு நல்ல விஷயம், இப்படி உடல் எடை இழந்ததுதான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.