Divya Ganesh Was Ex Fiance Of RK Suresh : பிரபல சீரியல் நடிகையான திவ்யா கணேஷ், ஒரு பிரபல நடிகரை திருமணம் செய்ய இருந்தார். ஆனால் அந்த திருமணம் பாதியிலேயே நின்று போனது.
Divya Ganesh Was Ex Fiance Of RK Suresh : பிக்பாஸ் டைட்டில் திவ்யா கணேஷ் வென்றிருப்பதாக கூறப்படுகிறது. பல தமிழ் சீரியல்களில் நடித்திருந்தாலும், பாக்கியலட்சுமி சீரியலுக்கு பிறகுதான் திவ்யா பிரபலமாக மாறினார். இவர், வளர்ந்து வரும் நடிகையாக இருந்த போது, ஒரு பிரபல நடிகரை திருமணம் செய்துகொள்ள இருந்தார். ஆனால், அந்த திருமணம் பாதியிலேயே நின்று போனது. அந்த நடிகர் யார் தெரியுமா?
பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருந்தவர், திவ்யா கணேஷ். இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்தவர் திவ்யா கணேஷ். இவரை பெரிதாக பிரபலப்படுத்தியது, பாக்கியலட்சுமி தொடர்தான்.
திவ்யா கணேஷ் பிக்பாஸ் 9வது சீசனின் 28வது நாளில் உள் நுழைந்தார். பலரது மனங்களில் பலமான போட்டியாளராக இருந்த இவர், இறுதிப்போட்டிவரை கண்டிப்பாக வருவார் என்று கணிக்கப்பட்டது. அதன்படியே, அவர் கடைசி நாள் வரை இந்த போட்டியில் இருந்தார்.
திவ்யா, டைட்டில் வின்னர் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு ரூ.50 லட்சம் வரை பரிசுத்தொகையாக கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் 9 நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளரான திவ்யா, தான் திரையுலக பயணத்தை ஆரம்பித்த போது ஒரு நடிகரை திருமணம் செய்ய இருந்தார்.
அந்த நடிகர் வேறு யாருமில்லை, ஆர்.கே.சுரேஷ்தான். ஆர்.கே.சுரேஷ் தமிழ் திரையுலகின் வில்லன் நடிகர்களுள் ஒருவர். ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார்.
திவ்யா கணேஷிற்கும் ஆர்.கே.சுரேஷிற்கும், 2018ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற இருந்தது. இது, நிச்சயதார்த்தம் வரை சென்ற நிலையில் திடீரென திருமணம் நின்றது.
இது குறித்து இதற்கு முன்னர் பேசிய திவ்யா கணேஷ், இந்த திருமணம் நின்றதற்கான காரணம் எதையும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், இந்த விஷயம் தன்னை மிகவும் பாதித்ததாகவும் இதனால் பிறரை நம்புவதற்கு தனக்கு பயமாக இருப்பதாகவும் கூறினார். ஆர்.கே.சுரேஷ் இப்போது இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு 2 குழந்தைகளுக்கு தந்தையாகி இருக்கிறார்.