பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா?
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த வாரம் நடைபெற்ற டெவில், ஏஞ்சல் டாஸ்கில் பலரது சுயரூபம் வெளியாகி உள்ளது.
இந்த வார எலிமினேஷனில் மொத்தம் 12 போட்டியாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதனால் யார் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
9வது வாரத்தின் நாமினேஷனில் பவித்ரா ஜனனி, ராயன், ஜாக்குலி, சத்யா, ரானவ், ரஞ்சித், முத்துக்குமரன், சச்சனா நமிதாஸ், மஞ்சரி நாராயணன், தர்ஷிகா, சௌந்தரியா நஞ்சுதன், ஆர்.ஜே.ஆனந்தி ஆகியோர் உள்ளனர்.
பிக் பாஸ் தமிழ் வீட்டில் இந்த வாரம் இரட்டை எலிமிஷேசன் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 50 நாட்களை கடந்த நிலையில் இன்னும் வீட்டில் அதிக போட்டியாளர்கள் உள்ளனர்.
கடந்த வாரத்தை போலவே முத்துக்குமரன் அதிக வாக்குகள் பெற்று எலிமினேஷனில் இருந்து தப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது.
ராயன் மற்றும் ரஞ்சித் இருவரில் ஒருவர் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அடுத்த வாரத்திற்கான தலைவராக ரஞ்சித் தேர்வாகி உள்ளதால் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.