India Pakistan War: பாகிஸ்தான் மீது இந்தியா பதில் தாக்குதல் தொடங்கியிருப்பதாக கூறப்படும் நிலையில், பாக்., பிரதமர் குடியிருப்பின் அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
India Pakistan War: பாகிஸ்தான் மீது இந்தியா பதில் தாக்குதல் தொடங்கியிருப்பதாக கூறப்படும் நிலையில், பாக்., பிரதமர் குடியிருப்பின் அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாகிஸ்தான் இன்று இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் தொடுக்க முயற்சித்தது. இந்தியா அதனை முறியடித்தது. இதையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா தற்போது பதில் தாக்குதல் தொடுத்து வருகிறது.
பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் டிரோன்கள் மூலம் தொடுத்த தாக்குதல் முயற்சி இந்தியாவின் S-400 வான் தடுப்பு அமைப்புகளால் முறியடிக்கப்பட்டன.
இருப்பினும், இந்தியா முழுவதும் விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களின் பல்வேறு நகரங்களில் முற்றிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் இந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டாலும், இந்தியா தற்போது மீண்டும் பாகிஸ்தான் மீது தாக்குதலை தொடங்கியிருக்கிறது. நேற்று நள்ளிரவு ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல், இன்று பாகிஸ்தான் வான் ரேடார்கள் மற்றும் வான் தடுப்பு பாதுகாப்பு அமைப்புகள் மீது தாக்குதல் என அடுத்தடுத்து தாக்குதல் மேற்கொண்டிருந்தது.
இன்றிரவு பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சிக்கு பதிலடி கொடுக்கும்விதமாக, கராச்சி, இஸ்லாமாபாத், சியோல்கோட், லாகூர் உள்ளிட்ட 4 நகரங்களில் இந்திய ராணுவம் தனது தாக்குதலை தொடங்கி உள்ளது.
இந்நிலையில், இஸ்லாமாபாத் நகரில் உள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் குடியிருப்பின் அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால், பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் பாதுகாப்பு காரணமாக பதுங்கு குழியில் பதுங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே அறிவிக்கப்படாத போர் நிகழ்ந்து வரும் சூழலில், இன்றிரவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்றிரவு பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கலாம் எனவும் கூறப்படுகிறது. கராச்சி துறைமுகம் மீது தாக்குதல் என தகவல்கள் கூறுகின்றன, ஆனால் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. பாகிஸ்தான் தற்போது மிகுந்த அழுத்தத்தில் ஆழ்ந்துள்ளது.