Union Budget 2026: பட்ஜெட் 2026 -இல் வரி செலுத்துவோருக்கு உள்ள எதிர்பார்ப்புகள் என்ன? அவர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் என்ன? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Budget 2026 Expectations: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1, 2026 அன்று (ஞாயிற்றுக்கிழமை) தனது ஒன்பதாவது தொடர்ச்சியான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். வரி செலுத்துவோர் பட்ஜெட் 2026 -இல் எதிர்பார்க்கும் 5 முக்கிய அறிவிப்புகளை பற்றி இங்கே காணலாம்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1, 2026 அன்று (ஞாயிற்றுக்கிழமை) தனது ஒன்பதாவது தொடர்ச்சியான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இது மோடி 3.0 அரசாங்கத்தின் இரண்டாவது முழு பட்ஜெட்டாக இருக்கும்.
இந்த பட்ஜெட் மீது, நடுத்தர வர்க்கத்தினர், பெண்கள், விவசாயிகள், வரி செலுத்துவோர் என பலதரப்பட்ட மக்கள் பல வித எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர்.
குறிப்பாக கடந்த ஆண்டு வரி அடுக்குகளில் எற்பட்ட பெரிய மாற்றங்களுக்குப் பிறகு, வரி செலுத்துவோர் 2026 பட்ஜெட் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்த முறையும் நிதி அமைச்சர் தங்களுக்கு முக்கிய சலுகைகளை அளிப்பார் என அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.
வரி செலுத்துவோர் பட்ஜெட் 2026 -இல் எதிர்பார்க்கும் 5 முக்கிய அறிவிப்புகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
தற்போது, சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு, பழைய வரி முறையில் ₹50,000 மற்றும் புதிய வரி முறையின் கீழ் ₹75,000 நிலையான விலக்கு கிடைக்கிறது. அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு, இது ₹100,000 ஆக அதிகரிக்கப்படலாம் என்று நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். இது ஊழியர்களின் கையில் கிடைக்கும் சம்பளத்தை அதிகரிக்கும்.
கடந்த பட்ஜெட்டில் (2025), ₹12 லட்சம் வரையிலான வருமானம் வரி இல்லாததாக மாற்றப்பட்டது (தள்ளுபடிகளுடன்). இந்த முறை, நடுத்தர வர்க்கத்தினருக்கு நிவாரணம் வழங்க, பிரிவு 87A இன் கீழ் விலக்கு வரம்பை ₹13 லட்சத்திலிருந்து ₹15 லட்சமாக உயர்த்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கலாம்.
பழைய வரி முறையைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு பிரிவு 80C இன் கீழ் ₹1.5 லட்சம் வரம்பு பல ஆண்டுகளாக மாறாமல் உள்ளது. முதலீட்டை ஊக்குவிக்க இந்த வரம்பு ₹2 லட்சத்திலிருந்து ₹2.5 லட்சமாக அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, சுகாதார காப்பீட்டு பிரீமியங்களுக்கான (80D) வரம்பு ₹25,000 இலிருந்து ₹50,000 ஆக அதிகரிக்கப்படலாம்.
பங்குச் சந்தை மற்றும் மியூசுவல் ஃபண்டுகளில் விதிக்கப்படும் நீண்ட கால மூலதன ஆதாயங்கள் (LTCG) மீதான வரி விலக்கு வரம்பை தற்போதிருக்கும் ₹1.25 லட்சத்திலிருந்து ₹1.5 லட்சம் அல்லது ₹2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று முதலீட்டாளர்கள் கோருகின்றனர். இது சிறு முதலீட்டாளர்களுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை வழங்கும்.
பணி ஓய்வுக்கான திட்டமிடலை இன்னும் கவர்ச்சிகரமானதாக மாற்ற, அரசாங்கம் NPS அடுக்கு-2 கணக்குகளுக்கு வரி விலக்குகளை வழங்கலாம் அல்லது நிறுவனத்தின் பங்களிப்புகளுக்கான விலக்கு வரம்பை 14% இலிருந்து அனைவருக்கும் ஒரே மாதிரியான நிலைக்கு அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.