Budh Shani Yuti September 2025: புதனும் சனியும் ஒன்றுக்கொன்று 180 டிகிரி கோணத்தில் பிரதியுதி திருஷ்டியை உருவாக்கவுள்ளன. இதனால் அதிக நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Grand Cross Effect Budhan and Shani: புதன் மற்றும் சனியின் நிலையால் உருவாகும் பிரதியுதி திருஷ்டியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இதனால் ராஜயோகம் உண்டாகும். அந்த ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
1/10அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக இருக்கும் சனி பகவான் நியாயத்தின் கடவுளாக பார்க்கப்படுகிறார். கிரகங்களின் இளவரசரான புதன் பேசாற்றல், அறிவாற்றல், செல்வம், வளமை ஆகியவற்றின் காரணி கிரகமாக உள்ளார்.
2/10திருக் பஞ்சாங்கத்தின்படி, செப்டம்பர் 17, 2025 அன்று இரவு 11:15 மணிக்கு, புதனும் சனியும் ஒன்றுக்கொன்று 180 டிகிரி கோணத்தில் இருப்பார்கள். இரண்டு கிரகங்களும் ஒன்றுக்கொன்று 180 டிகிரி நிலையில் இருப்பது பிரதியுதி திருஷ்டியை உருவாக்கும்.
3/10ஜோதிடத்தில், வளர்ச்சி, வணிகம் மற்றும் பேச்சின் காரணி கிரகமாக உள்ள புதன், நியாயத்தின் கடவுளான சனியுடன் இணைந்து உருவாக்கும் பிரதியுதி திருஷ்டி விசேஷமான ஒரு ஜோதிட அம்சமாக பார்க்கப்படுகின்றது.
4/10புதன் சனி சேர்க்கையால் உருவாகும் பிரதியுதி திருஷ்டியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளிலும் இது மிகப்பெரிய நன்மைகளை அள்ளித்தரும். இவர்களுக்கு இந்த நேரம் பொற்காலமாய் ஜொலிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
5/10மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு, புதன்-சனி சேர்க்கை பல நல்ல வாய்ப்புகளைத் தரும். வேலையில் வெற்றி, வியாபாரத்தில் லாபம் என அனைத்தும் நல்லதாகவே நடக்கும். புதிய பாதைகள் திறக்கும். வாழ்வில் மன அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். அலுவலக பணிகளில் உள்ளவர்கள் நிதி நெருக்கடியிலிருந்து நிவாரணம் பெறலாம். திருமணமானவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். இது மன அழுத்தத்தைக் குறைக்க ஒரு வாய்ப்பாக இருக்கும். குடும்பத்துடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.
6/10கன்னி: செப்டம்பர் 17 ஆம் தேதி இரவு உருவாகும் புதன் சனி சேர்க்கை அம்சத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு இந்த நேரம் நல்ல நேரமாக இருக்கும். புதனின் செல்வாக்கால் செறிவு அதிகரிக்கும், மேலும் அவர்களால் எளிதாக படிப்பில் கவனம் செலுத்த முடியும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வெற்றிக்கான புதிய பாதைகள் திறக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகள் நிறைவடையும்.
7/10மகரம்: புதன் சனி சேர்க்கையால், மகர ராசிக்காரர்கள் சிறப்பு நன்மைகளைப் பெறுவார்கள். நிதி நிலைமை மேம்படும். வேலையில் இருப்பவர்கள் பெரிய பொறுப்புகளை பெற வாய்ப்புள்ளது. ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவார்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மகிழ்ச்சியான தருணங்கள் வாழ்வில் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் அன்பு ஆழமாகும். குழந்தைகளின் அறிவுத்திறன் விரிவடையும்.
8/10புதனின் அருள் பெற்று, அறிவாற்றல், பேச்சாற்றல் பெற்று, அனைத்து செல்வங்களையும் பெற "ரௌகிணேயாய வித்மஹே சந்த்ர புத்ராய தீமஹி தந்நோ: ஸெளம்ய ப்ரசோதயாத்" என்ற புதன் காயத்ரி மந்திரத்தை பாராயனம் செய்வது நல்லது.
9/10சனி பகவானின் அருள் பெற்று வாழ்வில் பல வெற்றிகளை பெற, தினமும் ‘ஓம் காகத்வஜாய வித்மஹே, கட்க அஸ்தாய தீமஹி, தன்னோ மந்த ப்ரசோதயாத்’ என்ற சனி காயத்ரி மந்திரத்தை கூறுவது நல்லது.
10/10பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.