புதாதித்ய ராஜயோகம்: கைக்கோர்க்கும் புதன் - சூரியன்; 3 ராசிகளின் வாழ்வு பிரகாசிக்கும்!

Budhaditya Rajyoga: மீன ராசியில் புதனும், சூரிய பகவானும் இணைய இருப்பதால் புதாதித்ய ராஜயோகம் உருவாகும். இந்த ராஜயோகத்தால் 3 ராசிக்காரர்களின் வாழ்வில் பல்வேறு நன்மைகள் வந்து சேரும்.

ஹோலி பண்டிகை (Holi Festival 2025) நாளை (மார்ச் 14) கொண்டாடப்பட உள்ளது. நாளை மறுதினம் (மார்ச் 15) சூரிய பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி (Sun Transit In Pisces) ஆக இருக்கிறார். அதாவது, புதன் கிரகம் தற்போது இருக்கும் மீன ராசிக்கு சூரியனும் பெயர்ச்சி அடைகிறார். இதனால், சுமார் ஓராண்டுக்கு பின்னர் புதன் - சூரியன் இணைவதால் (Mercury Sun Conjunction) புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது.

1 /8

ஜோதிடத்தின்படி, கிரக பெயர்ச்சி நிகழ்வதால் சுபமான யோகங்கள் உருவாகும். இந்த யோகங்கள் அனைத்து ராசிக்காரர்களின் (12 Zodiac Signs) வாழ்விலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

2 /8

அந்த வகையில், நாளை (மார்ச் 14) ஹோலி பண்டிகை கொண்டாடப்படும் வேளையில், நாளை (மார்ச் 15) சூரிய பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி (Sun Transit In Pisces) அடைய இருக்கிறார்.

3 /8

மீனத்தில் தற்போது புதன் கிரகமும் இருப்பதால், சுமார் ஓராண்டுக்கு பிறகு புதனும், சூரியனும் தற்போது இணைய உள்ளன. இதனால், புதாதித்ய ராஜயோகம் (Budhaditya Rajyoga) உருவாகும்.

4 /8

இந்த ராஜயோகம் உருவாவதன் மூலம் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் ஜொலிக்கும். இவர்களின் மதிப்பும், மரியாதையும் உயரும். புதாதித்ய ராஜயோகத்தால் அதிக நன்மைகளை பெறும் 3 ராசிகளை இங்கு காணலாம். 

5 /8

மேஷம் (Aquarius): புதாதித்ய ராஜயோகம் மேஷ ராசிக்காரர்களின் ஜாதகத்தில் 2ம் வீட்டில் உருவாகும். இதனால் பண வரவு அதிகமாகி வங்கிக் கணக்கில் இருப்பும் இரட்டிப்பாகும். பணியிடத்தில் புது புது வாய்ப்புகள் உருவாகும். வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். குடும்ப உறவில் மகிழ்ச்சி உண்டாகும். தொழிலுக்காக வாங்கிய கடன்களை அடைப்பீர்கள்.

6 /8

ரிஷபம் (Taurus): புதாதித்ய ராஜயோகம் ரிஷப ராசிக்காரர்களின் ஜாதகத்தில் 11ம் வீட்டில் உருவாகும். இந்த காலகட்டத்தில் வருமானம் அதிகரிக்கும். குழந்தைகள் தொடர்பாக நல்ல செய்தி வந்து சேரும். முதலீட்டில் பெரிய லாபம் கிடைக்கலாம். தொழில் செய்வோருக்கும் இந்த நல்ல காலம் ஆகும். தனியாரில் வேலைப்பார்ப்பவர்களுக்கும் புது வாய்ப்புகள் உருவாகி, முன்னேற்றம் காண்பீர்கள். 

7 /8

மிதுனம் (Gemini): புதாதித்ய ராஜயோகம் மிதுன ராசிக்காரர்களின் 10வது இடத்தில் உருவெடுப்பார். பணி வாழ்வில் பெரிய முன்னேற்றத்தை பெறுவீர்கள். பொருளாதாரமும் பலப்படும். நிறைவடையாத வேலைகளும் நிறைவடையும், மன அழுத்தத்திற்கு தீர்வு ஏற்படும். வேலை தேடி வருபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதேபோல், வேலையில் இருப்பவர்கள் பணி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கலாம்.

8 /8

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் கணிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.