பல் துலக்காமல் தண்ணீர் குடிக்கலாமா கூடாதா? மருத்துவர்கள் சொல்வது..

Drink Water Without Brushing Teeth : பல் துலக்காமல், தண்ணீர் குடிப்பதால் என்ன ஆகும் தெரியுமா? மருத்துவர்கள் சொல்லும் இந்த விஷயத்தை கேளுங்கள். 

Drink Water Without Brushing Teeth : பல் துலக்குவது என்பது நம் உடலை நாமே தினசரி சுத்தம் செய்து கொள்வதில் முக்கியமாக உதவும் ஒன்றாகும். இதனை, கண்டிப்பாக அனைவரும் செய்தே ஆக வேண்டும். அப்படி இல்லை என்றால், உடல் சுத்தமாக இருக்காது என்பது பலரது கருத்து. ஆனால், பலருக்கும் பல நாட்களாக தீராத டவுட் ஒன்று உள்ளது. அது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.

1 /7

பல் துலக்குவது என்பது, மனிதர்கள் எழுந்தவுடன் செய்யும் நடவடிக்கைகளுள் ஒன்றாகும். தனிப்பட்ட சுகாதாரத்தை பாதுகாக்க, சுத்தமாக இருக்க நாம் பல் துலக்குவோம்.

2 /7

தினமும் காலையும் மாலையும் பல் துலக்க வேண்டும் என்பது பல் மருத்துவர்களின் கூற்றாகும். இப்படி செய்வதால், வாயில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்கள் அழிவதோடு, பல் பாதுகாப்பாக இருக்கிறது. 

3 /7

காலையில் எழுந்ததும், முதல் வேளையாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதும் மருத்துவர்கள் பரிந்துரைகளுள் ஒன்றாகும். ஆனால், இந்த தண்ணீரை நாம் பல் துலக்கிய பின்பு குடிக்க வேண்டுமா, அல்லது முன்னதாகவே குடிக்க வேண்டுமா என்பது சந்தேகமாக இருக்கும்.

4 /7

உடல் வெப்பநிலையை சீராக்கி, புத்துணர்ச்சி அளிப்பதற்கு தண்ணீரை குடிப்பது அவசியம் ஆகும். அத்தகைய நீரை, காலையில் எழுந்த பின்பு வெறும் வயிற்றில் குடிப்பதால் ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

5 /7

அதாவது, கொஞ்சமாக வாயில் நீரை ஊற்றி, உமிழ்ந்து துப்பி விட்டு பின்பு பல் துலக்காமல் நீரை குடிக்கும் போது உடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை நாம் உட்கொள்வதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால், நோய் எதிர்ப்பு ஆற்றல் உருவாகும் என்றும் கூறுகின்றனர்.

6 /7

காலை மாலை என இரு வேளையும் பல் துளக்கும் போது, நாம் பலவித மாற்றத்தை நம் உடலில் ஏற்படுத்துகிறோம். இரவில் பல் துலக்கும் போது, வாயில் தங்கியிருக்கும் உணவு கழிவுகளை அகற்றுவதால் கெட்ட பாக்டீரியாக்கள் உடலில் தங்காது. அதே போல, பல் பிரச்சனைகளும் வராமல் பார்த்துக்கொள்ளலாம். 

7 /7

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)