Kalaingar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு ரேஷன் கார்டு இல்லாதவர்கள் விண்ணப்பிக்க முடியுமா? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Kalaingar Magalir Urimai Thogai : ரேஷன் கார்டு இதுவரை பெறாதவர்கள், இல்லாதவர்கள் எல்லாம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியுமா? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்...
தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை (Kalaingar Magalir Urimai Thogai) திட்டத்தை வெகு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இந்தியாவிலேயே மிகச் சிறப்பாக இந்த திட்டத்தை செயல்படுத்தி வரும் அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு குட்நியூஸை அண்மையில் அறிவித்தது.
அதாவது, இந்த திட்டத்தில் இதுவரை பயனாளியாக இல்லாதவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்தது. அதாவது, இந்த திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய உள்ளது தமிழ்நாடு அரசு.
இதனால், இந்த திட்டத்தில் பயன்பெற தகுதியான பெண்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்க ஜூன் 4 ஆம் தேதி தமிழ்நாடு அரசு மக்களுடன் முதலவர் என்ற சிறப்பு முகாமை மாநிலம் முழுவதும் 9000 இடங்களில் நடத்த உள்ளது.
அப்போது, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், வங்கி பாஸ்புக் நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
இதில் பலருக்கும் ஒரு சந்தேகம் இருக்கிறது. அது என்னவென்றால் ரேஷன் கார்டு இல்லாதவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாமா? என கேட்கின்றனர்.
உண்மையில் இந்த திட்டத்துக்கு மிக அடிப்படையான முக்கியமான ஆவணமே குடும்ப அட்டை (Ration Card) தான். ரேஷன் கார்டு இல்லாதவர்கள் கட்டாயம் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியாது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் நீங்கள் பயனாளியாக சேர வேண்டும் என்றால் முதலில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து பெற வேண்டும். அதேபோல் பொருளில்லா அட்டை வைத்திருப்பவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது.
எனவே, ரேஷன் கார்டு பெற்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விதிமுறைகளையும் அறிந்து கொண்டு இந்த திட்டத்துக்கு நீங்கள் விண்ணப்பித்தீர்கள் என்றால் உங்களின் விண்ணப்பம் ஏற்கப்படும்.