DA Hike Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது கிடைக்கும்? அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்? லேட்டஸ்ட் அப்டேட்டை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Central Government Employees DA Hike: ஜனவரி 2026 -க்கான அகவிலைப்படி உயர்வுக்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். ஆனால், இந்த அறிவிப்பு வெளிவர தாமதம் ஆகும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், அறிவிப்பு எப்போது வந்தாலும், ஜனவரி முதல் டிஏ அரியர் தொகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு ஊழியர்கள், ஜனவரி 2026 -க்கான அகவிலைப்படி (DA) உயர்வு குறித்த அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். மூன்று மாதங்கள் கடந்துவிட்ட போதிலும், இது தொடர்பாக அரசு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. வழக்கமாக, அகவிலைப்படி உயர்வு ஹோலி பண்டிகையை ஒட்டி அறிவிக்கப்படும். ஆனால், இம்முறை ஏற்பட்டுள்ள தாமதம் ஊழியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
தற்போதைய சூழலைக் கருத்தில் கொள்ளும்போது, அகவிலைப்படியில் (DA) 2% அல்லது 3% உயர்வு ஏற்படக்கூடும் என மதிப்பிடப்படுகிறது. இதன் மூலம் அனைத்து ஊதிய நிலைகளிலும் உள்ள ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்படும். இருப்பினும், அரசு இன்னும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. இறுதி முடிவை எடுக்காததால், இந்த கணக்கீடுகள் அனைத்தும் தற்போதுள்ள உத்தேச புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன.
நிலை 1 மத்திய அரசு ஊழியர்களுக்கு (அடிப்படைச் சம்பளம் ₹18,000), 2% அகவிலைப்படி உயர்வு மூலம் கூடுதலாக ₹360 கிடைக்கும்; 3% உயர்வு மூலம் கூடுதலாக ₹540 கிடைக்கும். நிலை 2 மத்திய அரசு ஊழியர்களுக்கு (அடிப்படைச் சம்பளம் ₹19,900), 2% உயர்வு மூலம் சம்பள அதிகரிப்பு ₹398 ஆகவும், 3% உயர்வு மூலம் ₹597 ஆகவும் இருக்கும்.
லெவல் 3-இல் (அடிப்படை ஊதியம் ₹21,700), மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% ஊதிய உயர்வுடன் கூடுதலாக ₹434-ம், 3% உயர்வுடன் ₹651-ம் கிடைக்கும். லெவல் 4-இல் (அடிப்படை ஊதியம் ₹25,500), மாத ஊதிய உயர்வு 2% என்ற அளவில் ₹510 வரையிலும், 3% என்ற அளவில் ₹765 வரையிலும் அமையலாம்.
அதிக சம்பளம் பெறும் மத்திய அரசு ஊழியர்களின் மாத சம்பளம் இன்னும் அதிகமாக உயரும். அதாவது இந்த ஊதிய உயர்வு வெவ்வேறு நிலைகளுக்கு ஏற்ப மாறுபடலாம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படி (DA) உயர்வு எப்போது அறிவிக்கப்பட்டாலும், ஜனவரி முதல் அதுவரையிலான அரியர் தொகை கிடைக்கும். இந்த நிலுவைத் தொகை அடுத்த மாத ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படும். இது ஊழியர்களுக்குக் கூடுதல் நிதிப் பலன்களை அளிக்கும்.
அகவிலைப்படி ஒரு நிலையான சூத்திரத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றது. அகவிலைப்படி% = [{AICPI-IW -இன் 12 மாத சராசரி (அடிப்படை ஆண்டு 2001) – 261.42} ÷ 261.42] × 100
டிசம்பர் 2025-இல் 7வது ஊதியக் குழுவின் பதவிக்காலம் நிறைவடைந்த பிறகு நடக்கும் முதல் அகவிலைப்படி உயர்வாக இது உள்ளது. இந்த முறை ஏற்படும் அகவிலைப்படி உயர்வின் தாக்கம் 8வது ஊதியக்குழுவின் சம்பள கணக்கீடுகளிலும் இருக்கும்.
இந்த வகையில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு டிஏ / டிஆர் உயர்வு, சம்பள / ஓய்வூதிய உயர்வு மற்றுன் அரியர் தொகை என 3 பரிசுகள் காத்திருக்கின்றன.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.