அரசு ஊழியர்களுக்கு 3 பரிசுகள்: தீபாவளி போனஸ், அகவிலைப்படி உயர்வு, 8வது ஊதியக்குழு அமலாக்கம்

Published: Sep 25, 2025, 08:46 AM IST|Updated: Sep 25, 2025, 08:54 AM IST

Central Government Employees News: மத்திய அரசு ஊழியரா நீங்கள்? உங்களுக்கு தீபாவளிக்கு முன் 3 பரிசுகள் கிடைக்கவுள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Central Government Employees Diwali Bonus: மத்திய அரசு ஊழியர்கள் தீபாவளிக்கு முன்னதாக 8வது ஊதியக் குழுவின் அமலாக்கம், அகவிலைப்படி அதிகரிப்பு மற்றும் தீபாவளி போனஸ் ஆகிய பரிசுகளை அடுத்தடுத்து பெற வாய்ப்புள்ளது. இதைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

GST1/10

ஜிஎஸ்டி

இந்திய மக்களுக்கு தீபாவளி பரிசை வழங்குவதாக கொடுத்த வாக்குறுதியை  மோடி அரசு நிறைவேற்றிவிட்டது. செப்டம்பர் 22 முதல் மத்திய அரசு புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை அமல்படுத்தியுள்ளது, இது சுமார் 370 பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. இதன் காரணமாக நடுத்தர வர்க்க மக்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைத்துள்ளது.

Central Government Employees2/10

மத்திய அரசு ஊழியர்கள்

அடுத்ததாக, ​​தீபாவளிக்கு முன் அரசாங்கம், மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய பரிசுகளை வழங்க தயாராகி வருகிறது. மத்திய அரசு ஊழியர்கள் 8வது ஊதியக் குழுவின் அமலாக்கம், அகவிலைப்படி அதிகரிப்பு மற்றும் தீபாவளி போனஸ் ஆகியவற்றை அடுத்தடுத்து பெற வாய்ப்புள்ளது. இதைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

8th Pay Commission3/10

8வது ஊதியக்குழு

மத்திய அரசு விரைவில் 8வது ஊதியக்குழுவை அமல்படுத்தக்கூடும். அக்டோபர் 2025க்குள், அரசாங்கம் குழுவை அமைத்து, குறிப்பு விதிமுறைகளை (ToR) வெளியிட்டு 8வது சம்பளக் குழுவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கலாம்.

Arrears4/10

அரியர் தொகை

விதிகளின் படி, 8வது ஊதியக்குழு ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வர வேண்டும். இதில் தற்போது தாமதம் ஏற்படக்கூடும். எனினும் ஜனவரி 2026 முதல் 8வது ஊதியக்குழுவின் நன்மைகளுக்கான அரியர் தொகை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும்.

Fitment Factor5/10

ஃபிட்மெண்ட் ஃபாக்டர்

அரசு அறிவிக்கும் 8வது ஊதியக்குழு மத்திய அரசு ஊழியர்களுக்கான தற்போதைய சம்பளக் கட்டமைப்பை மதிப்பீடு செய்யும். ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் அடிப்படையில் ஊழியர்களின் ஊதிய உயர்வும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய உயர்வும் தீர்மானிக்கப்படும்.

Salary Hike6/10

ஊதிய உயர்வு

8வது ஊதியக்குழுவின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.92 - 3,00 -க்குள் இருக்கும் என நம்பப்படுகின்றது. அந்த நிலையில், குறைந்தபட்ச சம்பளமான ரூ.18,000 வாங்கும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்? 1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.34,560 / 2.08 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.37,440 / 2.28 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.41,040 / 2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.46,260 / 2.86 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.51,480 / 3.00 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.54,000

Dearness Allowance7/10

அகவிலைப்படி

ஜனவரி 1, 2025 முதல் ஊழியர்கள் 55 சதவீத அகவிலைப்படி பெற்று வருகின்றனர். இப்போது ஜூலை-டிசம்பர் 2025க்கான இரண்டாவது தவணை முடிவு செய்யப்பட உள்ளது. அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு (AICPI) தரவுகளின்படி, ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி 3% அதிகரித்து 58 சதவீதத்தை எட்டலாம்.

DA Hike8/10

டிஏ உயர்வு

தீபாவளிக்கு முன், அரசாங்கம் 3 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவிக்கலாம் என கூறப்படுகின்றது. அதாவது ஊழியர்களின் அகவிலைப்படி 55 சதவீதத்திலிருந்து 58 சதவீதமாக அதிகரிக்கும். டிஏ உயர்வு அறிவிக்கப்படவுடன் ஊழியர்களின் சம்பளத்தில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்படும்.

Diwali Bonus9/10

தீபாவளி போனஸ்

ஒவ்வொரு ஆண்டும், அரசு நான்-கெசடட் ஊழியர்களுக்கு உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸ் (PLB) அல்லது தற்காலிக போனஸை (ad-hoc bonus) வழங்குகிறது. இந்த ஆண்டுக்கான போனஸ் தீபாவளிக்கு முன் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Disclaimer10/10

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் 8வது ஊதியக்குழுவின் கீழ் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கப்படுகிறது.