Central Government: தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் சம்பளம், தினசரி கொடுப்பனவு, ஓய்வூதியம் மற்றும் கூடுதல் ஓய்வூதியம் ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளது.
MPs Salary, Pension Hike: மேலும் இந்த சம்பள மற்றும் ஓய்வூதிய உயர்வு என்பது 2023இல் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் சம்பளம், தினசரி கொடுப்பனவு, ஓய்வூதியம் மற்றும் கூடுதல் ஓய்வூதியம் குறித்த அப்டேட் இன்று வந்துள்ளது.
அதாவது, இவர்களின் சம்பளம், ஓய்வூதியம், கூடுதல் ஓய்வூதியம், தினசரி கொடுப்பனவு உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த சம்பள உயர்வு 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த 2 ஆண்டுகளுக்கான அரியர் தொகையும் வழங்கப்படும் எனலாம்.
இந்த உயர்வு என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியச் சட்டம் 1954, மூலம் சாத்தியமாகியிருக்கிறது. மேலும் வருமான வரிச் சட்டம், 1961இல் சுட்டிக்காட்டப்பட்டுள்ள செலவு பணவீக்கக் குறியீட்டைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறது.
சம்பள உயர்வு: தற்போது மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் சம்பளம் ரூ.1 லட்சமாக உள்ளது. இது தற்போது ரூ.1 லட்சத்து 24 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தினசரி கொடுப்பனவு: மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் தினசரி கொடுப்பனவு ரூ.2000 ஆக உள்ளது. அது தற்போது ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஓய்வூதியம்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாத ஓய்வூதியம் தற்போது ரூ.25 ஆயிரமாக உள்ளது. அது தற்போது ரூ.31 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கூடுதல் ஓய்வூதியம்: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒவ்வொரு வருட சேவைக்கும் கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படும். அது தற்போது ரூ.2,000 ஆக உள்ளது. ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.