சாம்பியன்ஸ் டிராபி இந்தியா vs நியூசிலாந்து போட்டி: பிளேயிங் 11 என்ன?

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணிக்கான கணிக்கப்பட்ட பிளேயிங் 11 குறித்து பார்க்கலாம். 

சாம்பியன்ஸ் டிராபியின் அரை இறுதி போட்டிக்கு குரூப் ஏ-வில் இருக்கும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில், இந்த இரு அணிகளுக்கான கடைசி லீக் போட்டி நாளை (மார்ச் 02) நடைபெறும் நிலையில், இத்தொகுப்பில் நியூசிலாந்து அணிக்கான பிளேயிங் 11 குறித்து பார்க்கலாம். 

1 /11

டேவான் கான்வே நியூசிலாந்து அணிக்காக தொடக்க வீரராக களம் இறங்குவார். இவர் அந்த அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 

2 /11

வில் யங் நியூசிலாந்து அணிக்காக தொடக்க வீரராக டேவான் கான்வே உடன் களம் இறங்குவார். இவர் நல்ல ஃபார்மில் இருக்கிறார். 

3 /11

நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் அந்த அணிக்காக 3வது இடத்தில் களம் இறங்குவார். மேலும், அந்த அணியின் நம்பிக்கை வீரராக இருக்கும் இவர், முக்கியமான சூழ்நிலைகளில் ரன்களை சேர்ப்பார். 

4 /11

இடது கை பேட்ஸ்மேனான ரச்சின், கடந்த போட்டியில் சதம் விளாசினார். இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த காத்துக்கொண்டிருக்கிறார். 

5 /11

நியூசிலாந்து அணிக்கான விக்கெட் கீப்பரான டாம் லதாம், சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவர் ஸ்பின்னர்ஸுக்கு எதிராக சிறப்பாக விளையாடுவார். 

6 /11

அதிரடி பேட்டரான க்ளேன் பிலிப்ஸ் சிறந்த ஸ்பின்னரும் கூட. இவர் முக்கிய கட்டங்களில் விக்கெட்களை வீழ்த்தி அணிக்கு கைகொடுப்பார். 

7 /11

மிட்செல் பிரேஸ்வெல் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பான பங்களிப்பை கொடுப்பவர். இவர் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் முக்கிய பங்களித்தார். 

8 /11

நியூசிலாந்து அணியின் கேப்டனான மிட்செல் சண்ட்னர், சிறந்த ஸ்பின்னர் ஆவார். இவரது கேப்டன்ஸியில் நியூசிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 

9 /11

மெட் ஹென்ரி நியூசிலாந்து அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இவர் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளார். 

10 /11

நியூசிலாந்து அணியின் முக்கியமான மற்றொரு பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன். இவர் இந்திய அணிக்கு நிறைய அச்சுறுத்தலை கொடுத்துள்ளார். 

11 /11

வில் ஓ ரூர்க் பந்து வீச்சில் நியூசிலாந்து அணிக்கு கூடுதல் பலமாக காணப்படுகிறார். இவர் இந்திய அணிக்கு எதிராக சிறப்பான பங்களிப்பை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.